மார்ச் 19, 1919
கர்நாடக சங்கீதத்தில் புகழ் பெற்ற பாடகியாக விளங்கிய டி. கே. பட்டம்மாள் பிறந்த தினம்.
மேடைக் கச்சேரிகளில் பெண்களையே பார்க்க முடியாத காலத்தில் டி. கே. பட்டம்மாள், எம். எஸ். சுப்புலட்சுமி, எம். எல். வசந்தகுமாரி மூவரும் மேடைக் கச்சேரிகள் செய்து புகழ்பெற்றவர்கள்.
டி. கே. பட்டம்மாள் கான சரஸ்வதி என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரர். இவர் பேத்தி தான் பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் .
மார்ச் 19, 1933
தற்போது வாழும் தலைவர்களுள் பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய பெருமை கொண்ட பண்பட்ட தலைவரான குமரி அனந்தன் பிறந்த நாள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர், இந்திய மக்களவை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்றவர், சிறந்த பேச்சாளர் என இவருக்கு நிகர் என்று சொல்ல ஒப்பார் யாரும் இல்லாத பன்முகத் திறன் கொண்டவர்.
டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இவர் மகள் தான்.
மார்ச் 19 1950
டார்ஜான் கதைகள் எழுதி உலகப் புகழ்பெற்ற எட்கார் ரைஸ் பரௌஸ் காலமானார்.
மார்ச் 19 1982
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆச்சார்ய கிருபளானி மறைந்த தினம்.
இந்திய சுதந்திரம் பெற்றபோது அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தவர் இவர்.
பிரதமர் பதவிக்கான தலைவரைத் தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் கட்சிக்குள் நடத்தப்பட்ட தேர்தலில் சர்தார் வல்லபாய் படேல் தான் பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் என்று கட்சி உறுப்பினர்கள் கருதுவது தேர்தல் முடிவின் மூலம் தெரிந்தது. சர்தார் வல்லபாய் படேலுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் ஆச்சார்ய கிருபளானி அதிகபட்ச வாக்குகளைப் பெற்றிருந்தார். அந்தத் தேர்தலை ஏற்றுக்கொள்ளாமல் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேருவைப் பிரதமராக்கினார் என்பதெல்லாம் கடந்த கால வரலாறு.
மார்ச் 19 2008
குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் நடிகராகவும் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மொழிகளில் புதிய உயரம் தொட்ட ரகுவரன் மறைந்த நாள்.
ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்தவர் இவர்.

Comments
Post a Comment
Your feedback