மார்ச் 14, 1794
பருத்திக் கொட்டையிலிருந்து பஞ்சைத் தூய்மைப்படுத்திப் பிரித்தெடுக்கும் காட்டன் ஜின் என்னும் இயந்திரத்தைக் கண்டுபிடித்த எலி விட்னி இன்று அதற்கான காப்புரிமம் பெற்றார்.
மார்ச் 14, 1879
விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாள்.
ஜெர்மனியில் பிறந்த ஐன்ஸ்டீன் 1940ல் அமெரிக்க குடியுரிமை பெற்றார்.
1905 இல் அவர் வெளியிட்ட சார்பியல் கொள்கை உலகம் முழுவதும் அவரது புகழை பரவச் செய்தது.
அவர் வெளியிட்ட விஞ்ஞான உண்மைதான் அணுகுண்டு தயாரிப்பதற்கு அடிப்படை . அதனால் ஏற்பட்ட அழிவைக் கண்டு அவர் பெரிதும் வருந்தினார். போரை எதிர்த்து இறுதி வரை பேசி வந்தார்.
உலகத்தில் என்றும் மாறாமல் இருப்பது ஒளியின் வேகம் ஒன்றுதான். மற்ற எல்லாமே மாறக்கூடியவை என்பது அவரது ஒரு கொள்கை.
சார்பியல் கொள்கை தவிர வேறு சில உண்மைகளையும் அவர் கண்டறிந்து கூறினார்.
ஒளி என்பது போட்டான் எனப்படும் ஆற்றல் துகள்களால் ஆனது.
பொருளையும் ஆற்றலையும் ஒன்றை மற்றொன்றாக மாற்ற முடியும்.
திரவத்தில் மிதக்கும் துகள்களின் வேகமான இயக்கம் பற்றிய விளக்கம்.
இவை எல்லாம் அவரது கண்டுபிடிப்புகள்.
E=mc2 என்பது அவரது புகழ்பெற்ற ஒரு சூத்திரம். அணு சக்தியின் அடிப்படையே இதுதான்.
விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு 1921 இல் நோபல் பரிசு கிடைத்தது.
pi day:
ஐன்ஸ்டின் பிறந்த நாள் மார்ச் 14 .
அது கணக்கில் pi இன் மதிப்பான 3.14 என்பதை நினைவு படுத்தும் ஒரு நாள். அதனால் இந்த நாள் pi day என்றும் குறிப்பிடப்படுகிறது.மார்ச் 14, 1918
இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் பிறந்த நாள்.
சிவாஜியின் வசந்தமாளிகை,
தில்லானா மோகனாம்பாள்,
எம்.ஜி. ஆரின் அடிமைப்பெண்,
நல்லநேரம் மற்றும்
திரை இசையில் வேறொரு பரிமாணத்தைக் காட்டிய சங்கராபரணம் போன்ற பல படங்களின் இசையமைப்பாளர் இவர்.
காலத்தால் அழியாத எஸ்.பி.பி.யின் ஆயிரம் நிலவே வா என்ற பாடலை எம்.ஜி.ஆருக்காக அடிமைப்பெண்ணில் உருவாக்கியவரும் இவரே.
1988 ஆம் ஆண்டு வெளிவந்த “பாய்மரக்கப்பல்” படத்தில் எஸ்.பி.பி. இவரின் இசையில் பாடிய "ஈரத் தாமரைப் பூவே.." ஒரு அருமையான மெலடி.
கே. வி. மகாதேவன் பாடல்களை இன்று கேட்டாலும் கர்நாடக சங்கீதத்தை இத்தனை எளிமைப்படுத்த முடியுமா என்று வியப்பாக இருக்கும்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் தமிழில் மட்டும் 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த இவர் 1990 வரை திரையுலகில், இசையுலகில் புகழோடு விளங்கினார்.
மார்ச் 14, 1931
இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆரா திரையிடப்பட்டது.
மார்ச் 14, 2018
வானவியல் அறிஞரும் ஆசிரியருமான ஸ்டீப ன் ஹாக்கிங் மறைந்த நாள்.

Comments
Post a Comment
Your feedback