மார்ச் 23 1893
தமிழக அறிவியல் மாமேதைகளுள் ஒருவரான ஜி.டி. நாயுடு பிறந்த நாள்.
மார்ச் 23 1910
விடுதலைப் போராட்ட வீரர் ராம் மனோகர் லோகியா பிறந்த தினம்.
நாடு விடுதலை பெற்ற பிறகு சமூகப் பணிக்காகவே தன்னுடைய நேரத்தைச் செலவிட்டவர் இவர். அதற்காக, கடைசிவரை திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்த தன்னலமற்ற தியாகி இவர்.
மார்ச் 23 1921
புகழ் பெற்ற நாவலாசிரியை லக்ஷ்மி பிறந்த தினம்.
தன்னுடைய மருத்துவப் படிப்புக்குப் பணம் வேண்டும் என்பதற்காக எழுத ஆரம்பித்தவர் இவர். மருத்துவரான போதும் இலக்கிய உலகில் ஆர்வம் கொண்டு இறுதிவரை எழுதிவந்தவர்.
மார்ச் 23 1931
லாகூர் சதி வழக்கை விசாரித்த ஸ்பெஷல் ட்ரிபியூனல் தீர்ப்புப்படி பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகிய மூவரும் மாலை 7 மணிக்கு லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.
மறுநாள் சட்லெட்ஜ் நதிக்கரையில் ஹிந்து, சீக்கிய முறைப்படி அவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டதாகவும் அவர்களது உடைமைகள் ஆற்றில் தூக்கி எறியப்பட்டதாகவும் அரசு அறிவித்தது.
மார்ச் 23 1933
ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரி ஆனார்.
மார்ச் 23 1956
பாகிஸ்தான் தனது நாட்டை இஸ்லாமிய குடியரசு என்று அறிவித்தது. உலகிலேயே முதல் இஸ்லாம் குடியரசு இதுதான்.
மார்ச் 23 1988
பிரபல தமிழ் பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் மறைந்த நாள்..
சீர்காழி என்ற ஊரின் பெயரைச் சொன்னதும் முதலில் அது ஊர் என்று நம் நினைவுக்கு வருவதில்லை. அங்கு பிறந்து வளர்ந்து தன் காந்தக் குரலாலே எல்லோரையும் கவர்ந்த சீர்காழி எஸ். கோவிந்தராஜன் முகமே நம் நினைவுக்கு வரும்.
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா...
எங்கிருந்தோ வந்தான் ... இடைச்சாதி நான் என்றான்....
தேவன் கோயில் மணியோசை ...
போன்ற பாடல்கள் காற்றில் வரும்போதே கண்கள் பாதி மூட.. . செவியில் நுழைந்து மனதில் நிறைவதை உணர்ந்து சிலிர்த்திருக்கும் அனுபவம் வார்த்தைகளில் சொல்ல முடியாதது.
கோவில் திருவிழாக்கள் என்றாலே சீர்காழி கச்சேரி என்பது ஒரு காலத்தில் வழக்கமாக அமைந்திருந்தது.
மார்ச் 23, 2015
சிங்கப்பூரின் தந்தை எனக் குறிப்பிடப்படும் ச் லீ குவான் யூ மறைந்த நாள். சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமர் இவர் தான்.
தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரன் மறைந்த நாள்.
இவருடைய `அப்பாவின் சிநேகிதர்' சிறுகதைத் தொகுப்பிற்காக 1996ல் சாகித்ய அகாடெமி விருது வழங்கப்பட்டது.

Comments
Post a Comment
Your feedback