மார்ச் 13, 1781
யுரேனஸ் கோள் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.
மார்ச் 13, 1929
பென்சிலினின் தன்மைகள் பற்றிய ஆய்வுக் கட்டுரையை லண்டன் மெடிக்கல் ரிசர்ச் கிளப்பில் அலெக்சாண்டர் பிளமிங் இன்று படித்தார்.
மார்ச் 13, 1936
தமிழறிஞராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும் விளங்கிய பண்டிதர் கா. ரா. நமச்சிவாய முதலியார் மறைந்த தினம்.
மார்ச் 13, 1969
காஞ்சி காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய பீடாதிபதியான ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்த தினம்.
மார்ச் 13, 1986
தொழிலதிபர் மற்றும் பதிப்பாளர் மர்ரே ராஜம் மறைந்த நாள்.
மர்ரே நிறுவனத்தில் பணியாற்றி பின்னாளில் அந்த நிறுவனத்தையே நடத்தும் அளவு வளர்ந்தவர் இவர்.
கோவில்களுக்கும் தர்ம காரியங்களுக்கும் கனக்குப் பார்க்காமல் செலவு செய்த தர்மவான் இவர். இவருடைய சேவை, இலக்கியத்தை நோக்கித் திரும்ப முக்கியமானவர் பெ. நா. அப்புசாமி . அவர் மூலமாக தமிழறிஞர் வையாபுரிப்பிள்ளை அறிமுகமானார். வையாபுரிப்பிளை வழங்கிய ஆலோசனையினால் தமிழிலக்கியங்களை மலிவுப் பதிப்பில் வெளியிட முனைந்தார். வையாபுரிப்பிள்ளையையே பதிப்பாசிரியராகக் கொண்டு பதிப்புப் பணிகளைத் தொடங்கினார்.
முதல் நூலாக, திவ்யபிரபந்தத்தின் முதலாயிரம் சந்தி பிரிக்கப்பட்டு 1955இல் வெளியானது. வையாபுரிப்பிள்ளை, பெ.நா..அப்புசாமி, மு. சண்முகம் பிள்ளை, வி. மு. சுப்பிரமணிய ஐயர், பி.ஸ்ரீஆச்சார்யா, கி. வா. ஜகந்நாதன், தெ.பொ.மீனாட்சிசுந்தரம், ரா.பி.சேதுப்பிள்ளை முதலான தமிழறிஞர்களை உள்ளடக்கிய ஆசிரியர் குழுவைக் கொண்டு பழந்தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் என்று 40 க்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தரமான அச்சில் மலிவு விலையில் வெளியிட்டவர் இவர்.
குறிப்பாக இவர்கள் வெளியிட்ட பேரகராதிகளான வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி , தமிழ் கல்வெட்டுச் சொல்லகராதி ஆகியன இன்றும் முக்கியமான ஆய்வுக்கு களஞ்சியமாக விளங்குகின்றன.

Comments
Post a Comment
Your feedback