மார்ச்
29,1728
எடின்பர்க்கில்
முதன்முதலாக இசைக் கழகம் எடின்பர்க் இசைக்கழகம் என்ற பெயரில் நிறுவப்பட்டது.
பசுவின் கொழுப்பும் பன்றியின் கொழுப்பும் தடவப்பட்ட தோட்டாக்களை பயன்படுத்த மறுத்த காரணத்திற்காக ஒரு படைப் பிரிவில் உள்ள அத்தனை இந்திய வீரர்களும் தண்டிக்கப்பட்டனர். இதனால் மத உணர்ச்சி தூண்டப்பட்ட ஒரு வீரன் ஆத்திரமும் ஆவேசமும் கொண்டு பிரிட்டிஷ் அதிகாரி ஒருவரை போரில் கொன்று விட்டான். இதன் எதிரொலியாக மீரட் நகரில் உள்ள பல இந்திய வீரர்களை பிரிட்டிஷ் அதிகாரிகள் கலகக்காரர்கள் என்று குற்றம் சாட்டினர்.
சிப்பாய் கலகம் என்று அழைக்கப்பட்ட முதல் சுதந்திரப் போர்
துவங்கத் தூண்டுகோலாக அமைந்தது இந்த நிகழ்ச்சி.
அட்லாண்டாவைச்
சார்ந்த ஜான் பெம்பர்டன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட கொக்கோ கோலா மூளை
அபிவிருத்தி டானிக் என்றும் மேதைகளின் பானம் என்றும் தவறான விளம்பரத்துடன் விற்பனை துவங்கப்பட்டது.
ஆந்திராவில்
என்.டி.ராமராவ் தெலுங்கு தேசம் கட்சியைத் துவக்கினார்.
மார்ச் 29, 2007
புகழ் பெற்ற இசை மற்றும் நடன விமர்சகர் சுப்புடு மறைந்த நாள்.
த ஸ்டேட்ஸ்மேன் ஆங்கிலப் பத்திரிகையில் இசை, நடனம் குறித்த விமர்சனங்களை ஏறத்தாழ 60 ஆண்டுகள் எழுதி வந்தவர்.
தமிழ்ப் பத்திரிகைகளிலும் இசை விமர்சனங்கள் எழுதினார். பல மூத்த பாடகர்களும் நடனக் கலைஞர்களும் கூட சுப்புடுவின் விமரிசனத்துக்கு முக்கியத்துவம் தந்தனர். எவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தாலும் யாருக்கும் அஞ்சாமல் 'வெட்டு ஒன்று துண்டு இரண்டு ' என இவர் எழுதும் விமர்சனத்தை ஒருவித பயம் கலந்த மரியாதையோடு ஏற்றுக்கொண்டது இவரின் சிறப்புக்கும் நிபுணத்துவத்துக்கும் நேர்மைக்கும் கிடைத்த அங்கீகாரம்.

Comments
Post a Comment
Your feedback