மார்ச் 21, 476
நாளந்தா பல்கலைக்கழக வானியல் ஆய்வுக்கூடத்தில் ஆரியபாட்டியா என்னும் வானியல் ஆய்வு நூலை எழுதி வெளியிட்ட ஆரியபட்டா இன்று பாட்னாவில் பிறந்தார்.
இந்தியாவின் முதல் செயற்கைக்கோளுக்கு இவரது பெயரை நினைவு கூரும் வகையில் ஆரியபட்டா என்ற பெயர் சூட்டப்பட்டது.
மார்ச் 21, 1847தொலைபேசிக் கருவியைக் கண்டுபிடித்த ஸ்காட்லாந்து நாட்டு விஞ்ஞானியான அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் பிறந்த நாள்.
மார்ச் 21, 1867
வள்ளல் பாண்டிதுரைத் தேவர் பிறந்த நாள்.
நான்காம் தமிழ்ச் சங்கம் கண்டவர் இவர். இவருடைய முழுப்பெயர் பாலவநத்தம் ஜமீன் வள்ளல் பாண்டித்துரை தேவர்.
இவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் அரைகுறை ஆங்கிலப்புலவர் ஸ்காட் என்பவர். இவர் பிழையுடன் எழுதி வெளியிட்ட திருக்குறள் புத்தகத்தின் அனைத்து பிரதிகளையும் விலைகொடுத்து வாங்கி அவற்றை குழியில் போட்டு எரித்தார் தேவர்.
பிறர் கையில் அந்த அபத்தமான புத்தகங்கள் கிடைத்துவிடக் கூடாது என்பதே காரணம்.
இவர் 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சி.,யின் சுதேசிக் கப்பல் விடும், பெரும் பணிக்குத் தனியொருவராகவே ஒன்றரை லட்சம் பணத்தை அள்ளி வழங்கியவர்.
மார்ச் 21, 1916
புகழ்பெற்ற ஷெனாய் இசைக் கலைஞர் பிஸ்மில்லா கான் பிறந்த நாள்.
நம் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினைப் பெற்றவர் இவர்.
முதல் இந்தியக் குடியரசு விழாவில், செங்கோட்டையை நோக்கிய ஊர்வலத்தில், நேரு உள்ளிட்ட இந்தியத் தலைவர்கள் செல்லும்போது அந்த ஊர்வலத்தில் பிஸ்மில்லாகான் ஷெனாய் வாசித்தார்.
பிஸ்மில்லாகான் பிறந்த அதே 1916ல் பிறந்த இசைத்துறை மேதைகள் எம். எஸ். சுப்புலட்சுமி, ரவிசங்கர், லதாமங்கேஸ்கர் ஆகியோர். இந்த நான்கு பேருமே பாரத ரத்னா விருது பெற்றவர்கள்.
மார்ச் 21, 1923
சக்தி குழுமங்களின் தலைவர் தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் பிறந்த நாள்.
மார்ச் 21, 2016
திரைப்படத் துறை சார்ந்த அனைத்துத் தகவல்களையும் தொகுத்து வைத்திருந்ததால் திரைப்பட உலகின் தகவல் களஞ்சியம் என அழைக்கப்பட்ட பிலிம் நியூஸ் ஆனந்தன் மறைந்த நாள்.
மார்ச் 21
இரவுப் பொழுதும் பகல் பொழுதும் சமமாக இருக்கும் நாள்.
உலக வனவிலங்கு நாள்.

Comments
Post a Comment
Your feedback