மார்ச் 12, 1879
ஸ்கான்டியம் என்னும் உலோகம் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நில்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
மார்ச் 12, 1907
தமிழறிஞர் மா.ராசமாணிக்கனார் பிறந்த நாள்.
மார்ச் 12, 1914
வாகனங்களில் ஏர் பிரேக் அமைப்பைக் கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் வெஸ்டிங் ஹவுஸ் இன்று காலமானார்.
மார்ச் 12, 1930
புதன்கிழமையான இன்று காலை 6:30 மணிக்கு மகாத்மா காந்தி அகமதாபாத்தில் உள்ள தனது ஆசிரமத்திலிருந்து உப்பு சத்தியாகிரகம் செய்ய தண்டியாத்திரையைத் துவக்கினார்.
மார்ச் 12, 1949
பாரதியாரின் பாடல்கள் இன்று நாட்டுடைமையாக்கப்பட்டன. இதை முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழக சட்டசபையில் அறிவித்தார். முன்னதாக பாரதியார் பாடல்களுக்கான உரிமையை A.V.மெய்யப்ப செட்டியார் வாங்கியிருந்தார். காமராஜர் வேண்டுகோளை ஏற்று அவர் அதை அரசுக்கு இலவசமாக வழங்கினார்.

Comments
Post a Comment
Your feedback