மார்ச் 20 1727
புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்து உலகப் புகழ்பெற்ற சர்.ஐசக் நியூட்டன் லண்டனில் காலமானார்.
மார்ச் 20 1780
நகல் எடுக்கும் எந்திரம் டூப்ளிகேட்டிங் மிஷின் தயாரிப்பதற்காக ஜேம்ஸ் வாட் அண்ட் கம்பெனி என்ற நிறுவனத்தை அதன் கண்டுபிடிப்பாளரான ஜேம்ஸ் வாட் துவக்கினார்.
மார்ச் 20 1981
மூன்று பைசா , இரண்டு பைசா, ஒரு பைசா நாணயங்கள் அடிப்பது நிறுத்தப்பட்டது.
மார்ச் 20 1942
திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் பிறந்த நாள்.
ஆயிரத்து ஐநூற்றுக்கும் அதிகமான திரைப்பாடல்களை எழுதியவர்.அரசவைக் கவிஞராக இருந்தவர். முன்னாள் மேலவை உறுப்பினரும் கூட.
தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உருவெடுத்து ...
பொன்மானத் தேடி நானும் பூவோடு வந்தேன்...
சின்னஞ்சிறு கிளியே சித்திர பூ விழியே...
இதழில் கதை எழுதும் நேரமிது...
என இவர் எழுதிய பல பாடல்கள் இன்றும் புகழ் பெற்ற பாடல்களாக விளங்குகின்றன.
மார்ச் 20 1992
உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் சத்யஜித்ரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
மார்ச் 20 2014
புகழ் பெற்ற ஆங்கில நாவலாசிரியர் குஷ்வந்த் சிங் மறைந்த நாள். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் இவர்.
இவர் எழுதிய நாவலான Train to Pakisthan (ட்ரெயின் டு பாகிஸ்தான்) இந்திய சுதந்திரத்தின் போது பாகிஸ்தான் பிரிவினைக் காலத்தில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்.

Comments
Post a Comment
Your feedback