மார்ச் 22 1744
பாபா பிளாக் ஷீப் முதலான நர்சரி பாடல்கள் அடங்கிய டாம்மி தம்ப்ஸ் சாங் புத்தகம் திருமதி மேரி கூப்பரால் வெளியிடப்பட்டது.
மார்ச் 22 1877
இந்தியாவின் பெரிய தொழில் சாம்ராஜ்யங்களுள் ஒன்றான டிவிஎஸ்&சன்ஸ் நிறுவனங்களின் நிறுவனர் T V சுந்தரம் அய்யங்கார் பிறந்த தினம்.
அப்போதைய சென்னை மாகாணத்தில் முதன் முதலில் பேருந்து சேவையைத் தொடங்கியவர் இவரே. மதுரையில் முதலில் பேருந்து சேவையை இவர் ஆரம்பித்த பிறகே தென் இந்தியாவில் சாலைப் போக்குவரத்துத்துறை என ஒரு துறை உருவானது.
மார்ச் 22 1935
பெர்சியா இன்று தனது பெயரை ஈரான் என்று மாற்றிக் கொண்டது.
மார்ச் 22 1942
பிரிட்டனின் இந்தியக் கொள்கையை விளக்க சர். ஸ்ட்ராபோர்ட் கிரிப்ஸ் இந்தியாவிற்கு வந்தார். அவர் பிரிட்டிஷ் அரசின் புதிய கருத்துக்களைக் கொண்ட நகல் பிரகடனம் ஒன்றை வைஸ்ராயின் நிர்வாக சபை அங்கத்தினர்களிடம் 23ஆம் தேதி (அதாவது வந்த அடுத்த நாள்) கொடுத்தார்.
மார்ச் 22 2005
பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன் மறைந்த நாள்.
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவரது இயற்பெயர் கணபதி சுப்ரமணியன் சர்மா என்பதாகும். திரைப்படத்துக்காக இது ராமசாமி கணேசன் என்று மாற்றப்பட்டது. ஜெமினி ஸ்டுடியோவில் பல ஆண்டுகள் பணியாற்றியதால் ஜெமினியும் இவர் பெயரோடு ஒட்டிக்கொள்ள ஜெமினிகணேசன் என்ற பெயரில் புகழ் பெற்ற நடிகரானவர் இவர்.
அவர் கடைசியாக தமிழில் நடித்த படம் 'அவ்வை சண்முகி'.
மார்ச் 22 2020
திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா என பல்வேறு வகையிலும் திறமை வாய்ந்தவரான விசு மறைந்த நாள்.
தன்னுடைய திரைப்படங்கள் வாயிலாக நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்களை ஜனரஞ்சகமான கதையாக்கிக் கொண்டு, தரமான குடும்பப் படங்களை வழங்கியவர் இவர்.

Comments
Post a Comment
Your feedback