ஜனவரி 9, 1816
1816 ஹம்பரி டேவி கண்டுபிடித்த டேவி பாதுகாப்பு விளக்கு (Devy's safety lamp) இன்று முதன்முறையாக ஹெப்பர்ன் நிலக்கரிச் சுரங்கத்தில் பயன்படுத்திப் பார்க்கப்பட்டது.
ஜனவரி 9, 1917
பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் டி. ஆர். இராமச்சந்திரன் பிறந்த நாள்.
150 திரைப்படங்களில் கதாநாயகனாகவும், பிற முக்கிய வேடங்களிலும், துணை வேடங்களிலும் நடித்துள்ளார். எந்த வேடத்தில் நடித்தாலும், நகைச்சுவை நடிகராகவே நடிப்பது இவரது தனித்தன்மை.
ஜனவரி 9, 1927
காந்தியவாதியும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வைத் தூண்டியவருமான சுந்தர்லால் பகுகுணா பிறந்த தினம்.
இமயமலைக் காடுகளைக் காக்கும் பொருட்டு சிப்கோ இயக்கத்தைத் துவங்கினார். கனிமச் சுரங்கங்களாலும் பெரிய அணைக்கட்டுக்களாலும் ஏற்படும் சுற்றுச்சூழல் அழிவுகளை எதிர்த்துப் போராடியவர் இவர். இந்திய அரசின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் 2009ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.
ஜனவரி 9, 1929
டாக்டர் அலெக்ஸாண்டர் பிளமிங் முதன்முதலாக தனது உதவியாளரான ஸ்டுவர்ட் கிராப்ட் என்பவருக்கு தான் கண்டுபிடித்த பென்சிலின் மூலமாக சிகிச்சை அளித்தார்.
ஜனவரி 9, 1950
நடிகர் ஒய். ஜி. மகேந்திரன் பிறந்த நாள்.
நாடக நடிகராகத் தொடங்கி திரைப்பட நடிகர், எழுத்தாளர் என தனி முத்திரை பதித்தவர் இவர். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பினால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
இவரின் தாயார் ராஜலட்சுமி பார்த்தசாரதி சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியின் நிறுவனர். இவரின் தந்தையார் தமிழ் மேடை நாடக முன்னோடிகளில் ஒருவரான ஒய். ஜி. பார்த்தசாரதி.

Comments
Post a Comment
Your feedback