Skip to main content

ஜனவரி 30

ஜனவரி 30, 1874

வள்ளலார் நினைவு நாள்.


படிக்க வந்த மாணவர்கள் அமர்ந்திருக்க அந்தப் புதிய மாணவன் இராமலிங்கனும் ஓர் ஓரத்தில் உட்கார்ந்து கொள்கிறான். காஞ்சிபுரம் மகா வித்துவான் சபாபதி பாடம் நடத்தத்தொடங்கினார்.

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் 

ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம் 

மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம் 

வஞ்சனைகள் செய்வாரோடு  இணங்க வேண்டாம்.

என்று ஆசிரியர் சொல்ல, அனைவரும் திரும்பச் சொன்னார்கள். இராமலிங்கனை எழுப்பிக் கூறச்சொன்னார். வேண்டாம் எல்லாம் வேண்டும் என மாற்றி புதிய பாடல் பாட அனுமதி கேட்டான் அந்த மாணவன். ஆசிரியரும் அனுமத்தித்தார் . 

"ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்"

என்று தொடங்கி ஒரு பாடல் பாடினான் அந்த மாணவன். 

அந்த மாணவன் தான் இராமலிங்க வள்ளலார் என்று பின்னாளில் புகழ் பெற்ற வள்ளலார். 

ஜனவரி 30, 1910 

இந்தியாவின் பசுமைப் புரட்சி மூலம் உணவு உற்பத்தியில்  தன்னிறைவுக்கு வித்திட்டவரான  சி. சுப்பிரமணியம் பிறந்த நாள்.  1998ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 7.11.2000 அன்று மறைந்தார். 

ஜனவரி 30, 1927 

தமிழறிஞர்  இரா.இளங்குமரனார்  பிறந்த தினம். 

செந்தமிழ் அந்தணர் என்ற அடைமொழியால் அறியப்பட்டவர். பள்ளி ஆசிரியராக இருந்த இவர்  பின்னர் நூலாசிரியர்,  உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர்,  பதிப்பாசிரியர் என ஒரு முழுமையான தமிழறிஞராக மிளிர்ந்தார்.  சொல்லாராய்ச்சிக்கும்  தனித்தமிழ் பயன்பாட்டுக்கும் முக்கியத்துவம் தந்த இவர், திருவள்ளுவர் தவச்சாலை என்ற அமைப்பை நிறுவி அதன் வழியாக தமிழ்முறைத் திருமணங்களையும் நடத்திவந்தார்.  

தன்னுடைய  94ஆவது வயதில் மதுரை திருநகரில் உள்ள தனது வீட்டில் 2021 ஜூலை  25 அன்று காலமானார்.

ஜனவரி 30, 1948

காந்திஜி மறைந்த நாள்.

ஜனவரி 30, 1984 

கொடைக்கானலில் மகளிர் பல்கலைக்கழகம் துவங்குவதற்கான அவசரச் சட்டம் தமிழ்நாடு ஆளுநரான எஸ்.எல்.குரானாவினால் பிறப்பிக்கப்பட்டது.

ஜனவரி 30, 2007

அமெரிக்க எழுத்தாளர்  சிட்னி ஷெல்டன் (Sidney Sheldon)  மறைந்த நாள். 

இவர் திரைப் படங்களுக்கும் தொலைக்காட்சித் தொடர்களுக்கும் திரைக்கதை, வசனம் எழுதியதன் மூலம் பிரபலமானவர். 

தனது 50வது வயதைக் கடந்த  பின்னர் நாவல்கள்  எழுதினார். அந்த நாவல்கள் எண்ணிக்கையில்  ஒரு சில தான் என்றாலும் ஒவ்வொரு நாவலும் உலக அளவில் பேசப்பட்டது. 

மாஸ்டர் ஆப் த கேம், ரேஜ் ஆப் ஏஞ்சல்ஸ், தி அதர் சைட் ஆஃப் த மிட் நைட் எல்லாம் உலகம் பூராவும் வரவேற்பைப் பெற்ற இவருடைய நாவல்கள். 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...