ஜனவரி 31, 1912
தமிழ் இலக்கிய உலகில் க.நா.சு என்று குறிப்பிடப்படும் க.நா.சுப்ரமண்யம் பிறந்த நாள்.
இவரது ஆங்கிலப் படைப்புகள் வழியாகவே தமிழ் இலக்கியத்தின் பெருமை பிறமொழி இலக்கிய ஆர்வலர்களையும் வாசகர்களையும் சென்றடைந்தது. படைப்பாளராக மட்டுமன்றி சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் புகழ்பெற்றவர் இவர்.
ஜனவரி 31, 1928
ஒட்டுவதற்கு உதவும் ஒளி புகக்கூடிய தன்மையுடைய டேப் (adhesive tape) விற்பனைக்கு வந்தது.
பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலையை எதிர்த்ததைத் தொடர்ந்து கருணாநிதியின் தலைமையிலான திமுக மந்திரி சபை பதவி நீக்கம் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் முதன்முதலாக ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது.
ஜனவரி 31, 1988
தமிழ் நாவலாசிரியர் அகிலன் மறைந்த நாள்.
அகிலன் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரும் கூட. நாவல் ஆசிரியராக அறியப்பட்டாலும் சிறுகதையாளராக, நாடகாசிரியராக, மொழி பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக பல முகங்களைக் கொண்டவர் இவர். தமிழில் இருபது நாவல்கள், இருநூறு சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் கதைகள், மொழிபெயர்ப்புகள் எனப் பல படைப்புகளை வழங்கியுள்ளார் அகிலன். சித்திரப்பாவை இவருடைய புகழ் பெற்ற நாவல்.
ஜனவரி 31, 2009
நகைச்சுவை நடிகர் நாகேஷ் மறைந்த நாள்.
தாராபுரம், கொளிஞ்சிவாடியில் 27 செப்டம்பர் 1933 அன்று பிறந்தவர் நடிகர் நாகேஷ். இயற்பெயர் நாகேஷ்வரன். நகைச்சுவை நடிகராக இவர் புகழ் பெற்றாலும் வில்லனாகவும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் நாகேஷ் .

Comments
Post a Comment
Your feedback