ஜனவரி 29, 1780
ஜேம்ஸ் அகஸ்ட் ஹிக்கே என்பவரால் 'த பெங்கால் கெசட் ' என்னும் வார இதழ் கல்கத்தாவில் துவங்கப்பட்டது. ஆங்கிலத்தில் வெளி வந்த இந்த இதழ் தான் இந்தியாவின் முதல் வார இதழாகும்.
ஜனவரி 29, 1915
பழம்பெரும் கர்நாடக சங்கீத வித்வான் வி. வி. சடகோபன் பிறந்த தினம்.
கர்நாடக சங்கீதத்தில் புகழ் பெற்ற பாடகராக விளங்கிய இவர் திரைப்பட நடிகராகவும் வலம்வந்தார். மதுரை காந்திகிராம் கிராமப் பல்கலைக்கழகத்தில் இசை இயக்குநராகவும், தில்லிப் பல்கலைக்கழகத்தில் இசைப் பேராசிரியராகவும் பணியாற்றிய இவர் இசையமைப்பாளராக, கவிஞராக, எழுத்தாளராக பல்துறை ஆளுமையாக இருந்தார்.
இவர் எப்படி மறைந்தார் என்பது இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை. டெல்லியிலிருந்து ஆந்திராவின் குண்டூருக்கு ரயில் வந்து கிகுண்டூர் ரயில்நிலையத்தில் இறங்கிய பின் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காந்தியின் ஆசி பெற்ற பட்டாபி சீதாராமையாவை எதிர்த்து நின்று வெற்றி பெற்றார்.
பட்டாபி சீதாராமையாவின் தோல்வி என் தோல்வி என்று இது குறித்து காந்தி கருத்து தெரிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்ற போதும் செயற்குழு உறுப்பினர்கள் காந்தியின் எண்ணப்படி சுபாஷுக்கு ஒத்துழைப்புத் தராததால் சுபாஷ் மார்ச் 29ஆம் தேதி பதவி விலகினார்.
ஜனவரி 29, 1980
பிரபல திரைப்பட நடிகர் எஸ்.பி.சுப்பையா காலமானார்.
ஜனவரி 29, 1995
பிரபல திரைப்படப் பாடகர் சி. எஸ். ஜெயராமன் மறைந்த நாள்.
பாடகராக மட்டுமல்லாமல் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் தன்னை நிரூபித்தவர் இவர். 1940 முதல் 1970 வரை வெளிவந்த படங்களில் சி. எஸ். ஜெயராமன் முக்கியமான பாடகராக விளங்கினார்.
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் அண்ணன் இவர். கருணாநிதி ஒரு திரைக்கதை எழுத்தாளராக சினிமாவில் அறிமுகமாவதற்குக் காரணமாக இருந்தவர் சி. எஸ். ஜெயராமன் தான்.
காவியமா நெஞ்சில் ஓவியமா என்ற அமரத்துவம் வாய்ந்த பாடல் இவர் பாடியது தான். பாவைவிளக்கு படத்தில் மருதகாசி வரிகளில் K.V.மகாதேவன் இசையில் வந்தது இந்தப்பாடல்.
ஜனவரி 29, 2003
பழம்பெரும் திரைப்பட நடிகை பண்டரிபாய் மறைந்த தினம். கன்னடத் திரைப்பட உலகின் முதல் கதாநாயகி என்ற பெருமை கொண்டவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் 1000 திரைப்படங்களில் நடித்த புகழ்பெற்ற நடிகை இவர்.
அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற மன்னன் படப் பாடலில் அம்மாவாக வந்து தமிழ் ரசிகர்களில் மனதில் பதிந்து போனவர் பண்டரிபாய்.

Comments
Post a Comment
Your feedback