ஜனவரி 4, 1792
பிரிட்டனில் கால்நடை மருத்துவக் கல்லூரி முதன் முதலாக தொடங்கப்பட்டது.
ஜனவரி 4, 1809
பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கிய லூயிஸ் பிரெய்ல் இன்று தான் பிறந்தார். பிரெஞ்சு நாட்டில் பிறந்த இவர் பார்வையற்றவர். தான் பார்வையற்ற நிலையில் இவர் உருவாக்கிய பிரெய்லி எழுத்து முறையால் தான் இன்று உலகில் உள்ள பார்வை இல்லாதவர்களும் இன்று படிப்பாளிகளாக மாற முடிகிறது.
ஜனவரி 4, 1903
ஆனந்த விகடன் எஸ். எஸ். வாசன் பிறந்த தினம்.
சுப்பிரமணியம் சீனிவாசன் என்ற முழுப்பெயரின் சுருக்கமே எஸ். எஸ். வாசன். 1926-இல் பூதூர் வைத்தியநாதய்யர் என்பவரால் தொடங்கப்பட்ட 'ஆனந்த விகடன்' இதழை, 1928-ல் விலைக்கு வாங்கினார். ஆனந்த விகடன் இதழுக்கு எஸ்.எஸ்.வாசனே ஆசிரியராக இருந்து நடத்த ஆரம்பித்தார். அன்று தொடங்கி இன்றும் ஆனந்த விகடன் இதழ் வெளியாகி வருகிறது. ஜெமினி திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியவரும் இவர் தான்.
ஜனவரி 4,1961
சார்பு நிலையற்ற ஆற்றலில் அணுக்களின் இயக்கத்தை விவரிக்கும் அலை இயக்கச் சமன்பாட்டைக் (Wave equation of quantum mechanics) கண்டுபிடித்த ஏர்வின் ஷ்ரோடிங்கர் இன்று காலமானார்.
ஜனவரி 4, 1974
தமிழகத்தின் அதிசய மனிதர் என்றும் தொழில் மேதை என்றும் புகழ்பெற்ற ஜி.டி.நாயுடு மறைந்தார்.
ஜனவரி 4, 1994
திருக்குறள் முனுசாமி மறைந்த தினம்.
ஜனவரி 4, 2005
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல அணு விஞ்ஞானி ஆர். சிதம்பரம் தன்னுடைய 88 ஆவது வயதில் இன்று காலமானார். இந்தியா 1974, 1998 ஆகிய ஆண்டுகளில் நடத்திய அணுகுண்டு சோதனைகளில் முக்கியமான பங்குவகித்தவர் இவர்.

Comments
Post a Comment
Your feedback