ஜனவரி 19 ,1597
அக்பரின் மொகலாயப் படையைக் கதிகலங்க வைத்த மேவார் மன்னன் மகாராணா பிரதாப் இன்று மரணம் அடைந்தார்.
ஜனவரி 19 ,1736
நீராவி இயந்திரம் என்ற வார்த்தையோடு நினைவுக்கு வரும் விஞ்ஞானி ஜேம்ஸ் வாட் பிறந்த தினம். இவரது கண்டுபிடிப்பு தான் உலகில் தொழிற்புரட்சிக்கு அடிப்படையாக அமைந்தது.
மகாகவி பாரதியாரின் வாழ்க்கையோடு தொடர்புடையவரான ஜி. சுப்பிரமணிய ஐயர் பிறந்த நாள்.
இவரது முழுப்பெயர் கணபதி தீட்சிதர் சுப்பிரமணிய ஐயர். 1878 செப்டம்பர் 20 அன்று தி இந்து என்ற செய்தி இதழை நிறுவி 1898 வரை அதன் உரிமையாளராகவும், மேலாண்மை இயக்குநராகவும், பதிப்பாளராகவும் இருந்தவர் இவர். சுதேசமித்திரன் என்ற தமிழ் வார இதழையும் இவர் தொடங்கினார். இந்திய விடுதலைப் போராட்ட வீரர் இவர்.
ஜனவரி 19 ,1898
புகழ்பெற்ற மராத்திய எழுத்தாளர் வி. எஸ். காண்டேகர் பிறந்த நாள்.
ஞானபீட விருது பெற்ற முதல் மராட்டிய எழுத்தாளர் இவர் தான். இவரது பல நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதால் தமிழ் வாசகர்களுக்கு பரிச்சயமான எழுத்தாளர் இவர். இவர் எழுதிய யயாதி எனும் நூல், 1960ல் சாகித்திய அகாதமி விருது பெற்றது.
ஜனவரி 19 ,1933
பிரபல கர்நாடக இசைப்பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் பிறந்த நாள். தனிச் சிறப்பான தன்னுடைய வெண்கலக் குரலால் இவரது பக்தி இசைப் பாடல்கள் காலத்தால் அழியாதவை. மேடைக் கச்சேரியோடு திரைப்படப் பின்னணிப் பாடகராகவும் புகழ் பெற்றவர். இவர் மகன் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் தற்போது பக்திப்பாடல்கள் பாடுவதில் புகழ்பெற்றவராக விளங்குகிறார்.
ஜனவரி 19,1956
நமது நாட்டில் இன்சூரன்ஸ் கம்பெனிகள் தேசிய உடைமையாக்கப்பட்டன.
ஜனவரி 19,1990
ஆன்மிக மற்றும் தியான போதனையில் உலகமெங்கும் தன்னுடைய சீடர்களை பெற்றுள்ள ஓஷோ மறைந்த நாள். இருபத்தொரு வயதில் ஞானம் பெற்று தன்னை ஆன்மிக குருவாக ஆக்கிக்கொண்டவர் இவர். ரஜ்னீஷ் சந்திர மோகன் என்பது இவரது இயற்பெயர்.
ஜனவரி 19, 1977
முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய சர்க்காரியா கமிஷன் அறிக்கை அரசுக்குத் தரப்பட்டது.
ஜனவரி 19, 2020
சென்னை சேப்பாக்கம் M.A. சிதம்பரம் ஸ்டேடியம் என்ற பெயருக்குக் காரணமான தொழிலதிபர் M. A. சிதம்பரம் (முத்தையா அண்ணாமலை சிதம்பரம்) மறைந்த நாள்.
செட்டிநாட்டு அரசர் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் மூன்றாவது மகன் இவர்.
ஜனவரி 19, 2021
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக இருந்த மருத்துவர் வி. சாந்தா மறைந்த நாள். 1955 ஆம் ஆண்டில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பணியில் சேர்ந்த இவர் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் மருத்துவ சேவையிலேயே அர்ப்பணித்துக்கொண்டவர். 1980 முதல் 1997 வரை மருத்துவமனையின் இயக்குனராகப் பணியாற்றினார். மருத்துவ சேவைக்காக பத்மஸ்ரீ , பத்ம விபூஷண் போன்ற விருதுகளைப் பெற்றவர் இவர்.

Comments
Post a Comment
Your feedback