ஜனவரி 10, 1761
தான் எழுதிய தொடர்ச்சியான நாட்குறிப்பு மூலம் ஒரு வரலாற்று ஆவணத்தை வழங்கிய ஆனந்தரங்கம் பிள்ளை மறைந்த தினம்.
பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெ னியின் அலுவலராகவும் துய்ப்ளெக்சு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். 1736 செப்டம்பர் 6 முதல் 1761 ஜனவரி 11 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் இடைவிடாமல் நாட்குறிப்பு எழுதியுள்ளார்.
உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடி என்று சாமுவேல் பெப்பீசு என்பவரைச் சொல்கிறார்கள்.
பெப்பீசு எழுதிய காலத்தை விட அதிகமான காலம் எழுதியதோடு அதை ஒரு வரலாற்று ஆவணம் போல வழங்கியதில் சாமுவேல் பெப்பீசு எழுதியதை விட இவரது நாட்குறிப்பு சிறப்பானது.
இந்தியாவின் பெப்பீசு என்பது இவருக்கு வழங்கப்படும் அடைமொழி.
இவரது நாட்குறிப்பு அக்காலத்தில் நடந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றின் பதிவாகத் திகழ்கிறது. இவரது நாட்குறிப்புகள் குறித்துப் பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளன. இன்றும் ஆய்வுகள் நடந்து வருகின்றன.
ஜனவரி 10, 1778
விலங்குகள் தாவரங்கள் கனிமங்கள் ஆகியவற்றை முறையாக வகைப்படுத்தியவரும் தாவரவியலில் பகுப்பாய்வியலில் இருபெயர் முறையை (Binomial nomenclature) அறிமுகப்படுத்தியவருமான ஸ்வீடனைச் சேர்ந்த தாவரவியல் அறிஞர் கார்ல் லின்னேய்ஸ் ஸ்வீடனில் காலமானார்.
ஜனவரி 10,1966
தாஸ்கண்ட் உடன்படிக்கை இன்று தான் கையெழுத்தானது.
ஜனவரி 10,1972
பங்களாதேஷ் என்ற ஒரு தனி நாடு உருவாகக் காரணமாக இருந்த ஷேக் முஜிபுர் ரகுமான் இன்று முதன் முதலாக தன்னுடைய புதிய நாட்டுக்குள் அடியெடுத்து வைத்தார்.
9 மாதங்களாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் இன்று நாடு திரும்பினார். இந்திய ஆதரவுடன் நடந்த போரில் வென்றபின் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து உருவானதுதான் பங்களாதேஷ்.
ஜனவரி 10, 2006
இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஆர். எஸ். மனோகர் மறைந்த தினம். .


Comments
Post a Comment
Your feedback