ஜனவரி 26, 1530
முதலாம் பானிபட் போரில் இப்ராஹிம் லோடியை தோற்கடித்து டெல்லியை கைப்பற்றியவர் பாபர். அவர் இன்று இறந்தார்.
ஜனவரி 26,1862
இந்தியாவில் தபால் தந்தி முறை அறிமுகம் செய்யப்பட்டது.
ஜனவரி 26,1924
கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் ஆகிய நாவல்களைப் படித்தவர்களுக்கு அதில் வரும் அந்த கதாபாத்திரங்களின் ஓவியங்களையும் நினைவில் இருக்கும். வாசகர்களின் மனதில் நிலைக்குமாறு அந்த ஓவியங்களை வரைந்த மணியம் என்ற டி. யூ. சுப்பிரமணியம் பிறந்த நாள் இன்று.
’பொன்னியின் செல்வன்’ நூலின் முன்னுரையில் இராஜாஜி, ஓவியர் மணியத்தின் ஓவியங்கள் நல்லவர்களையும் திருடத் தூண்டும் அளவு சிறப்பாக உள்ளதால், நூல்களை பத்திரமாக பாதுகாக்கும்படி நூலகர்களை நகைச்சுவையாக அறிவுறுத்தியிருப்பார். அது மணியத்தின் ஓவியங்களை இராஜாஜி எவ்வளவு ரசித்திருப்பார் என்பதை விளக்கும்.
ஜனவரி 26, 1941
கல்கத்தாவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தப்பிச்சென்றார்.
ஜனவரி 26, 1950
இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்திய ஜனநாயக குடியரசு உதயமானது. பாபு ராஜேந்திர பிரசாத் இந்திய குடியரசுத் தலைவராக பதவியேற்றார். இந்திய அரசின் சின்னமாக நான்கு சிங்கங்கள் கொண்ட அசோக சின்னம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சித்தரஞ்சன் ரயில் என்ஜின் தொழிற்சாலையை சித்தரஞ்சன் தாசின் மனைவி இன்று திறந்து வைத்தார்.
ஜனவரி 26, 1956
பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் பி. சி. ஸ்ரீராம் பிறந்த நாள். நாயகன், அலைபாயுதே, மௌன ராகம், அக்னி நட்சத்திரம் போன்ற திரைப்படங்களில் இவரது ஒளிப்பதிவு போற்றப்பட்டது.
ஜனவரி 26, 1966
நடிகர் சிவாஜி கணேசனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
ஜனவரி 26, 2015
பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர். கே. லட்சுமண் மறைந்த நாள்.
உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஆர். கே. நாராயணனின் தம்பி இவர்.
இராசிபுரம் கிருஷ்ணசுவாமி லட்சுமண் என்பது இவருடைய முழுப்பெயர்.
டைம்ஸ் ஆப் இந்தியாவில் அன்றாடம் இடம் பெற்ற இவரது கார்டூனில் வரும் 'திருவாளர் பொதுஜனம்' (Common Man) அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக வாசகர்களைக் கவர்ந்தவை.


Comments
Post a Comment
Your feedback