ஜனவரி 24, 1950
சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக பாபு ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜனவரி24,1950
இந்தியாவின் தேசிய கீதமாக ஜன கன மன அறிவிக்கப்பட்டது.
ஜனவரி 24,1965
உலகப் புகழ்பெற்ற முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் காலமானார்.
ஜனவரி 24,1966
இந்திய அணு ஆற்றல் கமிஷன் தலைவரான டாக்டர் ஹோமி பாபா சென்று கொண்டிருந்த விமானம் மத்திய ஐரோப்பாவில் ஆல்ப்ஸ் மலையில் மோதிச் சிதறியதில் அவர் உயிரிழந்தார். அறிவியல் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் இவர்.
ஜனவரி 24, 2015
பழம்பெரும் நடிகர் வி. எஸ். ராகவன் மறைந்த தினம். ஜனவரி 1, 1925 அன்று பிறந்த அவர் இன்று மறைந்தார். தமிழ் நாடக நடிகராக வாழ்க்கைத் தொடங்கி திரைப்பட, தொலைக்காட்சி நடிகராகவும் திரைப்பட இயக்குனராகவும் புகழ்பெற்றவர். ஆரம்ப காலத்தில் கே. பாலசந்தர் இயக்கிய பல மேடை நாடகங்களில் இவர் நடித்தார். மொத்தம் 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.


Comments
Post a Comment
Your feedback