28 ஜனவரி 1832
பிரிட்டிஷ் இந்தியாவின் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியான சர்.திருவாரூர் முத்துச்சாமி ஐயர் பிறந்த நாள்.
பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் உச்சுவாடி எனும் கிராமத்தில் இன்று பிறந்த அவர், 25 ஜனவரி 1895 அன்று மறைந்தார்.
ஜனவரி 28, 1848
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பல் மருத்துவர் ஹோரேஸ்வெல்ஸ் என்பவர் 1845இல் வலி தெரியாமல் பல் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்தார். அதை பாஸ்டனில் பிரபல அறுவை நிபுணர்கள் முன்னர் செய்து காட்ட முன்வந்த போது இன்றைய நாள் அவருக்கு துரதிஷ்டமாக அமைந்தது. பல்லை எடுப்பதற்காக வந்த ஒரு மாணவருக்கு வலி தெரியாமல் இருப்பதற்காக கொடுத்த மருந்தின் அளவு சரியில்லாமல் போய்விட்டது. அதனால் பல்லை எடுக்கும் போது வலியால் அந்த மாணவன் அலறிவிட்டான். இந்தத் தோல்வியால் மனமுடைந்த அவர் மருத்துவத் தொழிலை விட்டுவிட்டு சில்லறை விற்பனை செய்கின்ற கடை ஆரம்பித்து விட்டார்.
அதே நேரத்தில் இவரிடம் இருந்து இந்த முறையைத் தெரிந்து கொண்ட மார்டன் என்பவர் 1846 ஆம் ஆண்டு ஈதரைப் பயன்படுத்தி வெற்றி கண்டார். வெல்ஸ் இதற்கு உரிமை கொண்டாடியும் பயனில்லாமல் போய்விட்டது.
தான் கண்டுபிடித்த ஒன்று மற்றவர் பெயரில் வெளியானதால் 1848 ஆம் ஆண்டு குளோரோஃபார்முக்கு அடிமையாகி மனக் கோளாறு ஏற்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். நியூயார்க் சிறையில் குளோரோபாமை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி இன்று ஹோரேஸ்வெல்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.
ஜனவரி 28, 1882
சென்னையில் இன்று தான் முதன்முதலாக தொலைபேசி அறிமுகம் செய்யப்பட்டது.
ஜனவரி 28, 1899
இந்தியத் தரைப்படையின் முதல் தலைமைத் தளபதி Commander-in-chief பீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா பிறந்த தினம். இந்திய விடுதலைக்குப் பின்னர் 1947 ஆம் ஆண்டு நடந்த இந்திய பாகிஸ்தான் போரில் இந்தியப் படைகளை வழிநடத்திய தளபதி இவர் தான்.
ஜனவரி 28, 1925
இந்திய அணுஆற்றல் துறையின் முக்கியமான விஞ்ஞானி இராஜா இராமண்ணா பிறந்த நாள்.
இந்திய அணுக்கரு உலையின் தந்தை எனப் போற்றப்படுபவர் இராஜா இராமண்ணா. அணு விஞ்ஞானியாக இருந்தாலும் இசைக் கலைஞராகவும் சமஸ்க்ருத இலக்கியமேதையாகவும் இருந்தவர் இவர்.
1974 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாளன்று ராஜஸ்தான் பாலைவனத்தில் பூமிக்கடியில் நடத்தப்பட்ட 'சிரிக்கும் புத்தர்' (Operation Smiling Budhdha) என்ற ரகசியக் குறியீட்டுப் பெயரில் ஹைட்ரஜன் பாம் வெடிப்பு ஆய்வினை நடத்தியவர் இவர்.
ஜனவரி 28, 1988
நம் நாட்டில் தொலைபேசி வசதி ஏற்பட்டு 100 ஆண்டுகள் நிறைவுற்றதை நினைவூட்டும் வகையில் இரண்டு ரூபாய் மதிப்புடைய தபால் தலை இன்று வெளியிடப்பட்டது.

Comments
Post a Comment
Your feedback