ஜனவரி 21, 1895
தென்னிந்தியாவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்திய நீதிபதியான சர். முத்துசாமி ஐயர் இன்று காலமானார்.
ஜனவரி 21,1922
கோயம்புத்தூரில் உள்ள டவுன் ஹாலை தன் சொந்தச் செலவில் கட்டி அதை அரசுக்குக் கொடுத்த நரசிம்ம நாயுடு இன்று மறைந்தார். இவர் 'சுதேச அபிமானி' என்னும் இதழைத் தொடங்கி ஏழைகள் படும் துயரையும் அரசு ஊழியர்கள் ஏழைகளுக்கு இழைக்கும் கொடுமைகளையும் பற்றி எழுதி வந்தவர். 94 நூல்களுக்கு மேல் எழுதிய இவர் ஆங்கில அரசாங்கம் தந்த ராவ் பகதூர் பட்டத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டவர்.
ஜனவரி 21,1972
மேகாலயா மாநிலம் உருவானது. அஸ்ஸாமின் மலைப்பகுதி மாவட்டங்களைப் பிரித்து இம் மாநிலம் உருவாக்கப்பட்டது. உலகிலேயே அதிக மழை பொழியும் இடமாக இருந்த சிரபுஞ்சி இந்த மாநிலத்தில் தான் உள்ளது. ஷில்லாங் இந்த மாநிலத்தின் தலைநகர்.
ஜனவரி 21, 2002
வீடு - பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்து பெரிதும் பேசப்பட்ட ஒரு ஆழமான திரைப்படம். அதில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் கே. ஏ. சொக்கலிங்க பாகவதர். பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகரான அவர் மறைந்த நாள் இன்று.
அவர் ஒரு நல்ல பாடகரும் கூட. இசை நாடக நடிகராகப் பாடியும், நடித்தும் புகழ் பெற்றவர். பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பாலு மகேந்திராவின் வீடு, சந்தியா ராகம் ஆகிய படங்களில் நடித்த பிறகுதான் பரவலாக அறியப்பட்டார். சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர் இவர்.
ஜனவரி 21, 2013
மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பின் நிறுவனரான எம். எஸ். உதயமூர்த்தி மறைந்த நாள்.


Comments
Post a Comment
Your feedback