ஜனவரி 22,1926
தமிழ்நூற்கடல் என அழைக்கப்பட்ட தி. வே. கோபாலையர் பிறந்த நாள்.
தமிழ், பிரெஞ்சு, சமஸ்கிருதம், ஆங்கிலம் முதலான மொழிகளில் புலமை பெற்றவர் இவர். இலக்கணம், இலக்கியம், வைணவ இலக்கியங்களில் ஆழமான அறிவும் ஈடுபடும் கொண்டிருந்தவர் . தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் வழியாக பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். பல நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.
ஜனவரி 22,1927
உலகின் முதல் வானொலி வழியாக விளையாட்டின் நேர்முக வர்ணனை இன்று தான் முதல் முதலாக ஒளிபரப்பானது. முதல் விளையாட்டு வர்ணனை ஹைபரியில் நடைபெற்ற ஆர்சனல்-செப்பீல்ட் யுனைடெட் கால்பந்து போட்டியை நேரலையில் ஒலிபரப்பாகியது
ஜனவரி 22,1992
மறைந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அபுல் கலாம் ஆசாத் ஆகியோர் நாட்டிற்குச் செய்த தொண்டுகளை நினைவூட்டும் வகையில் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனால் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
Comments
Post a Comment
Your feedback