ஜனவரி 16, 1681
மராட்டிய சிங்கம் என்றும் மலை எலி என்றும் புகழ் பெற்ற வீர சிவாஜியின் மகன் சாம்பாஜி இன்று முடி சூட்டிக்கொண்டார்.
ஜனவரி 16, 1920
நானி பல்கிவாலாபிறந்த தினம். வழக்கறிஞர், இந்திய அரசியல்சட்ட நிபுணர், பொருளியல் அறிஞர், கல்வியாளர், இந்திய வரவு செலவுத்திட்ட ஆய்வாளர் என பலவாறு அறியப்பட்டவர் இவர். மொரார்சி தேசாய் பிரதமராக இருந்தபோது 1977 ஆம் ஆண்டில் இந்திய அரசு நானி பல்கிவாலா அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இருந்தார்.
ஜனவரி 16, 1978
பிரபல திரைப்பட இயக்குனர் ஏ.பீம்சிங் காலமானார்.
ஜனவரி 16, 2003
கொலம்பியா விண்வெளி ஓடம் இன்று தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது. கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 விண்வெளி வீரர்களுடன் இன்று புறப்பட்டது. 16 நாட்களுக்குப் பின் பூமிக்குத் திரும்புகையில் வெடித்துச் சிதறியது.

Comments
Post a Comment
Your feedback