ஜனவரி 3, 1558
பஞ்சாபில் அமிர்தசரசில் பொற்கோவில் உள்ளது எல்லோருக்கும் தெரியும். இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது இன்று தான். இந்தக் கோயிலைக் கட்ட அடிக்கல் நாட்டியவர் மியான்மிர் எனும் ஒரு முஸ்லிம் துறவி.
ஜனவரி 3, 1730
இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை இராணி வேலு நாச்சியார் பிறந்த நாள்.
இராணி வேலு நாச்சியார் 1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து விஜயரகுநாத சேதுபதி –சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகளாக பிறந்தார். ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். இவர் பல மொழிகள் கற்றதோடு ஆயுதப் பயிற்சியும் பெற்றார்.
1746 இல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்துவடுகநாதத் தேவருடன் திருமணம் நடந்தது.
1772 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி சிவகங்கைப் படைகளை பெஞ்சர் முற்றுகையிட்டார். ராஜா முத்து வடுகநாதர் அவரது பல வீரர்களுடன் அந்தப் போரில் இறந்து விட்டார். வேலுநாச்சியார் முத்து வடுக நாதரை அடக்கம் செய்து விட்டு திண்டுக்கல்-விருப்பாச்சி சென்றார்.
இராணி வேலு நாச்சியாரும் அவரது மகள் வெள்ளச்சி நாச்சியாரும் திண்டுக்கல் அருகே விருப்பாச்சிபாளையத்தில் கோயில நாயக்கர் பாதுகாப்பில் கீழ் வசித்து வந்தனர்.
சில காலம் கழித்து வேலுநாச்சியார், அவரது மகள் வெள்ளச்சி நாச்சியார் மற்றும் மருதுசகோதரர்கள் சிவகங்கைக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர். நவாபிற்கு கிஷ்தி செலுத்திவிட்டு நாட்டை ஆள்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஒரு உடன்படிக்கை படி ராணி வேலு நாச்சியார் சிவகங்கையை ஆட்சிபுரிவதற்கும் சின்னமருது நாட்டின் முதல்அமைச்சராகப் வெள்ளைமருது நாட்டின் தலைமைத் தளபதியாக பணிபுரிவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனால் கைம்பெண் ராணி வேலு நாச்சியார் தனது கணவனைத் தொடர்ந்து 1780 வரை சிவகங்கையை ஆட்சிபுரிந்தார். இவர் நாட்டை நிர்வகிப்பதற்காக மருது சகோதரர்களுக்கு அதிகாரங்களை வழங்கினார். சில வருடங்களுக்குப் பிறகு ராணி வேலு நாச்சியார் இறந்தார், ஆனால் அவரது இறப்பு குறித்த சரியான தேதி தெரியவில்லை. (அது சுமார் 1796ஆக இருக்கலாம்).
ஜனவரி 3, 1760
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்.
குளிர்பானங்களைக் குடிக்க உதவுகின்ற ஸ்ட்ரா கண்டுபிடிக்கப்பட்டு காப்புரிமம் வழங்கப்பட்டது.
ஜனவரி 3,1968
இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சென்னையில் கோலாகலமாக இன்று தொடங்கியது. மாலையில் நடந்த அலங்கார ஊர்திகள் ஊர்வலத்தை குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன் துவக்கி வைத்தார்.
ஜனவரி 3,1972
உரைநடை மற்றும் நாடகாசிரியர் பெருமழைப் புலவர்
பொ.வே.சோமசுந்தரனார் மறைந்த நாள்.
அவர் பிறந்த ஊர் மேலப் பெருமழை. அதுவே அவர் பெயருடன் ஒட்டிக்கொண்டது.
ஜனவரி 3, 2002
இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் சதீஷ் தவான் மறைந்த நாள். 1972 ஆம் ஆண்டு இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக இருந்தார். இவரது நினைவாகத் தான் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்துக்கு சதீஷ் தவான் மையம் என்று பெயரிடப்பட்டுள்ளது.


Comments
Post a Comment
Your feedback