ஜனவரி 23,1810
மின்பகுப்பு முறையில் ஹைட்ரஜனையும் ஆக்சிஜனையும் முதன் முதலில் பகுத்துக் காட்டிய ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானி வில்ஹெல்ம் ஜோஹன்ரிடர் இன்று காலமானார்.
ஜனவரி 23,1836
குரோமோசோம், நியூரான் என்னும் இரண்டு அடிப்படை அறிவியல் கலைச்சொற்களைத் தந்த ஜெர்மனியை சார்ந்த ஹென்ரிச் வில்ஹெல்ம் வால்டெயர் ஹார்ட்ஸ் இன்று காலமானார்.
ஜனவரி 23,1897
தேசப்பற்றுடைய ஒவ்வொருவரும் அறிந்திருக்கவேண்டிய தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள்.
ஜனவரி 23,1901
செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் தலைப்புச் செய்தியை அச்சிடுவது என்ற பழக்கம் இன்றுதான் துவங்கியது. விக்டோரியா மகாராணியின் மரணச் செய்தியை டெய்லி எக்ஸ்பிரஸ் என்ற நாளிதழ் இப்படி வெளியிட்டது.
ஜனவரி 23,1924
லெனின் ஜனவரி 21 ஆம் தேதி இறந்து விட்டார் என்று இன்று சோவியத் யூனியன் (ரஷ்யா) அதிகாரபூர்வமாக அறிவித்தது.
ஜனவரி 23,1926
பால் தாக்ரே என்று பிரபலமாக அறியப்படும் பால சாஹேப் கேஷவ் தாக்கரே பிறந்த நாள். மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவ சேனா என்னும் ஒரு பிரபலமான, இந்து தேசியக் கட்சியை நிறுவி அதன் தலைவராக இருந்தவர் இவர்.
ஜனவரி 23,1941
நைலான் நூலிழை இன்று தான் முதன்முதலாக தயாரிக்கப்பட்டது. பிரிட்டிஷ் நைலான் ஸ்பின்னர்ஸ் என்னும் நிறுவனம் நைலான் நூலிழைகளை இன்று தயாரித்தது.
ஜனவரி 23,1957
சென்னை மாகாணத்தில் தமிழ் ஆட்சி மொழியாக இன்று அறிவிக்கப்பட்டது.
ஜனவரி 23,1965
துர்க்காபூர் இரும்பு எக்குத் தொழிற்சாலை இன்று தான் துவங் கப்பட்டது.
ஜனவரி 23,1967
கர்நாடக இசை மேதை அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் இன்று காலமானார்.
ஜனவரி 23,1967
கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் ஜாவா மொழியின் முதற் பதிப்பு இன்று வெளியானது.

Comments
Post a Comment
Your feedback