ஜனவரி 15,1841
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்த ஜான் பென்னிகுவிக் பிறந்த நாள்.
ஜனவரி 15,1892
டாக்டர் ஹெய்ஸ்மித் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட (Basketball) கூடைப்பந்தாட்டம் என்னும் புதிய விளையாட்டின் விதிமுறைகள் Triangle என்னும் பத்திரிகையில் வெளிவந்தது.
ஜனவரி 15,1892
மயிலை சிவ. முத்து என்னும் பேராசிரியர் மயிலாப்பூர் சிவானந்த முத்துக்குமாரசாமி பிறந்த நாள்.
இசைப்பாடகர், எழுத்தாளர், குழந்தைக் கவிஞர், இதழாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் இவர்.
ஜனவரி 15,1917
நகைச்சுவை நடிகர். டணால் தங்கவேலு பிறந்த நாள்.
இவரது உண்மையான பெயர் கா. அ. தங்கவேலு. 1950 முதல் 1970 வரை தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக வலம்வந்தவர்.
சிவாஜி கணேசன் மற்றும் பத்மினியுடன் இணைந்து நடித்த தில்லானா மோகனாம்பாள் படம் இவர் பெரும்புகழ் பெற முக்கியமான காரணம்.
ஜனவரி 15,1949
ஜெனரல் கே. எம்.கரியப்பா இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாகப் பதவியேற்றார். இப்பதவிக்கு வந்த முதல் இந்தியர் இவரே.
எனவே இந்த நாள் படையினர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 15,1965
கவிஞரும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் திரைப்பட வசனகர்த்தாவுமான தஞ்சை இராமையாதாஸ் மறைந்த நாள். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.
இவர் எழுதிய பல பாடல்கள் சாகா வரம் பெற்றவை.
அவற்றுள் சில:
பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ ...
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ...
கல்யாண சமையல் சாதம் ...
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ...
புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே! தங்கச்சி கண்ணே ...
வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க...
ஜனவரி 15,1981
தேவநேயப் பாவாணர் மறைந்த நாள்.
நாற்பது மொழிகளின் சொல்லியல்புகளை ஆராய்ந்து தனித்தமிழ் சொல்வளம் குறித்து விரிவான நூல்களை இவர் எழுதியுள்ளார். தன்னுடைய மாணவரான பெருஞ்சித்திரனார் வழங்கிய 'மொழிஞாயிறு' என்ற அடைமொழியை பெருமையுடன் ஏற்றுக்கொண்டவர்.
ஜனவரி 15,1998
இந்திய வரலாற்றில் ஒரு வித்தியாசமான சாதனைக்குச் சொந்தக்காரரான முன்னாள் பிரதமர் குல்சாரிலால் நந்தா மறைந்த நாள்.
இவர் இரண்டு முறை பிரதமராக இருந்துள்ளார். ஒவ்வொருமுறையும் 13 நாட்கள் என மொத்தம் 26 நாட்கள் பிரதமராக இவர் இருந்துள்ளார்.
1964 இல் ஜவகர்லால் நேரு இறந்தபொழுது முதல் முறையும், 1966 இல் லால் பகதூர் சாஸ்திரி இறந்தபொழுது இரண்டாவது முறையும் இடைக்காலப் பிரதமராக பதவி வகித்தார்.
ஜனவரி 15, 2025
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளா கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இன்று தொடங்கியது. பிப்ரவரி 26 வரை 44 நாட்கள் நடந்த இந்த விழாவில் 66 .21 கோடி பக்தர்கள் புனித நீராடினர்.

Comments
Post a Comment
Your feedback