Skip to main content

ஜனவரி 20



 ஜனவரி 20, 1775 

மின்சாரத்தைப் பற்றிப் பேசும்போது ஆம்பியர்
(Ampere) என்ற சொல்  கூடவே வரும்.


பிரான்ஸ் நாட்டின் இயற்பியலாளரும், மின்காந்தவியல் (Electrodynamics) பிரிவைக் கண்டறிந்தவர்களில் ஒருவருமான ஆந்த்ரே-மரி ஆம்பியர் (Andre-Marie Ampere) பிறந்த தினம் 1775 ஜனவரி 20.

 பிரான்சின் லியோன் என்ற பகுதியில் பிறந்தார் (1775). தந்தை, வெற்றிகரமான வியாபாரி. தன் மகனுக்கு லத்தீன் கற்றுத் தந்தார். மிகவும் அறிவுக் கூர்மைமிக்க இந்தச் சிறுவனுக்குள் கட்டுக்கடங்காத அறிவு தாகம் ஊற்றெடுத்தது. 

ஒரு கலைக்களஞ்சியத்தின் ஒட்டுமொத்த பக்கங்களையும் மனப்பாடமாகக் கற்றுத் தேர்ந்தான், 13-வது வயதில் கணிதத்தில் அளவு கடந்த ஆர்வம் பிறந்தது. 

பிரபல கணிதவியல் அறிஞர்கள் லத்தீன் மொழியில் எழுதிய நூல்களைப் படிக்க ஏதுவாக லத்தீன் கல்வியையே தொடர்ந்தார். 

அப்போதே ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதி, ஒரு கணித அகாடமிக்கு அனுப்பினார். அது ஏற்றுக்கொள்ளப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதால் மேலும் தீவிரமாகக் கணிதம் கற்றார். 

சிறந்த கணித ஆசிரியரிடமும் அனுப்பிவைத்து, மகனின் கணித ஞானத்தைப் பட்டை தீட்டினார் தந்தை.

கணித நூல்களைத் தவிர இயற்பியல் தொடர்பான நூல்களையும் ஆழ்ந்து வாசிக்கத் தொடங்கினார். 

இவற்றைத் தவிர வரலாறு, பயணங்கள், கவிதை, இயற்கை அறிவியல் ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினார். 

பள்ளிக்குச் செல்லாமலேயே தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் கல்வி கற்றுவந்த இவர், தந்தையின் மரணததிற்குப் பின் ஓராண்டு காலம் படிப்பை நிறுத்திவிட்டார்.

 22-வது வயதில் தனிப்பட்ட முறையில் கணிதம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார். 


கணிதம் தவிர வேதியியல், மொழிகள்,  வானியல் மற்றும் இயற்பியலும் கற்றுத் தந்தார்.

 1804-ல் பாரீஸ் சென்ற இவர், அங்கு பல்கலைக்கழகத்துக்கு இணையான கணிதப் பாடங்களை எகோலே பாலிடெக்னிக் நிறுவனத்தில் கற்றுத் தந்தார். 1809-ல் அங்கு பேராசிரியர் பதவி கிடைத்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் மின்சார பாட்டரி தயாரிக்கப்பட்டது. காந்தமயமாக்கப்பட்ட ஊசியை மின்னோட்டத்தினால் தூண்ட முடியும் என்பதும் கண்டறியப்பட்டது. 


மின்சாரம் ஏன் காந்த விளைவை உண்டாக்குகிறது என்பதை அறிந்துகொள்ள, அதுகுறித்து மேலும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ஒரே மாதிரியான மின்னூட்டங்கள் (electric charge) ஒன்றை ஒன்று எதிர்க்கின்றன என்பதையும் எதிரெதிர் மின்னூட்டங்கள் ஒன்றையொன்று கவர்கின்றன என்பதையும் கண்டறிந்தார். 

மின்சாரத்துக்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை நிலை நாட்டினார். இவை இரண்டும் இணைக்கப்பட்டு, மின்காந்தவியல் அல்லது மின்னியக்கவியல் (electrodynamics) என்ற புதிய துறை பிறந்தது. 

இவர் கண்டறிந்த மின்னோட்டத்துக்கும் அது தூண்டும் காந்தப்புல சுற்றோட்டத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கும் விதி தற்போது ஆம்பியரின் மின்சுற்று விதி (Ampere’s circuital law) என்று குறிப்பிடப்படுகிறது. எலக்ட்ரான் என்று இப்போது அறியப்படும் துகள் உள்ளதை எடுத்துக் கூறினார். 

மேலும்,

 வேதியியல் தனிமம் ஃப்ளோரினைக் கண்டறிந்தார். தனிமங்களின் முறையான, அங்கீகரிக்கப்பட்ட அட்டவணை கண்டறியப்படுவதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்னரே தனிமங்களின் பண்புகள் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்தினார். 

மின்னோட்டத்துக்கான அனைத்துலகமுறை அலகு(IS unit) இவரது பெயரில் ஆம்பியர் எனக் குறிப்பிடப்படுகிறது. 

முறையான கல்வி பெறாவிட்டாலும் தன் மேதமையால் தலைசிறந்த ஆசிரியர், விஞ்ஞானி, கணிதவியலாளராக உயர்ந்த ஆந்த்ரே-மரி ஆம்பியர் 1836-ம் ஆண்டு 61-வது வயதில் மறைந்தார்.

ஜனவரி 20, 1892 

கூடைப்பந்தாட்டம் முதன்முதலாக விளையாடப்பட்டது.

ஜனவரி 20, 1972 

அருணாச்சலப் பிரதேசம் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது.

ஜனவரி 20, 1987 

பெ. தூரன் என்கிற  ம.ப. பெரியசாமி தூரன் மறைந்த நாள். 

தமிழில் கலைக்களஞ்சியம் தொகுத்த அறிஞர் இவர்.   கர்நாடக சங்கீத வித்வானாகவும் தமிழில் இசைப்பாடல்கள் எழுதும் புலவராகவும் விளங்கியவர். சிறுவர்களுக்கான சிறுகதைகளும் எழுதியுள்ளார். பத்மபூஷன் விருது பெற்றவர். 

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு அருகிலுள்ள மஞ்சக்காட்டு வலசு என்ற ஊரில் பழனிவேலப்பக் கவுண்டர்-பாவாத்தாள் ஆகியோருக்கு மகனாக 1908 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் நாள்    பிறந்தார்.  பெரியசாமி என்பது இவரது பெயர். தான்  கொங்கு வேளாளரில் "தூரன்" குலத்தைச் சார்ந்தவர் என்பதால் தன் பெயரோடு "தூரன்" என்று சேர்த்துக் கொண்டார். 

ஜனவரி 20, 1988 

எல்லை காந்தி என்று புகழ் பெற்ற கான் அப்துல் கபார்கான் மறைந்த நாள். அப்போது அவருக்கு வயது 98.

ஜனவரி 20, 1988 

எலுமிச்சை சாற்றில் வைட்டமின் சி இருப்பதை உறுதிப்படுத்திய சார்லஸ் கிளங்கிங் இன்று காலமானார்.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...