ஜனவரி 18,1927
டெல்லியில் பாராளுமன்ற கட்டிடம் கவர்னர் ஜெனரல் இர்வினால் திறந்து வைக்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி இந்த பாராளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
(இப்போதுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடம் அல்ல. இது 2023 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது).
கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆத்மாநாம் சென்னையில் இன்று பிறந்தார். இவரது இயற்பெயர் எஸ்.கே.மதுசூதன்.
கவிதை எழுதுவதோடு ஃப்ரெஞ்ச் மற்றும் லத்தின் அமெரிக்க மொழிக் கவிதைகளையும் மொழிபெயர்த்து எழுதியுள்ளார்.
இளம்வயதிலேயே மனச்சிதைவு நோய்க்கு ஆளாகி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.
2002-ல் காலச்சுவடு வெளியீடாக ஆத்மாநாம் எழுதிய 156 கவிதைகள் ஒரு தொகுப்பாக வெளிவந்தன.
ஜனவரி 18,1963
ஜீவானந்தம் என்ற ஜீவா மறைந்த நாள்.
ஜனவரி 18,1996
என்.டி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற என்.டி. ராமா ராவ் மறைந்த தினம்.
தெலுங்கு திரைப்பட நடிகராக வாழ்க்கையைத் தொடங்கி திரைப்பட இயக்குநர் ஆனார். அதன்பின் தெலுங்கு தேசம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய அவர், நான்கு முறை ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தார்.

Comments
Post a Comment
Your feedback