ஜனவரி 11, 1922
1922 இன்சுலினைப் பயன்படுத்தி முதன்முதலாக இன்று சிகிச்சை அளிக்கப்பட்டது. டோரண்டோ பொது மருத்துவமனையில் கடும் நீரிழிவினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த 14 வயது சிறுவனுக்கு இன்று இன்சுலின் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஜனவரி 11, 1932
ஏந்திப்பிடித்த மூவண்ணக் கொடியை கீழே தாழ்த்தாமல் போலீஸ் தடியடிகளை தாங்கிக் கொண்டு மண்ணிலே சாய்ந்து திருப்பூர் குமரன் உயர்நீத்தது இன்று தான்.
ஜனவரி 11, 1954
நோபல் பரிசு பெற்ற இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி பிறந்த தினம்.
குழந்தைத் தொழிலாளர்கள் முறையை ஒழிக்க இவர் ஆற்றிய பணிகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசு 2014ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. இவருக்கும் மலாலாவுக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.
ஜனவரி 11, 1966
லால் பகதூர் சாஸ்திரி இன்று மறைந்தார்.
நேற்று (10.1.1966) தாஸ்கண்ட் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுவிட்டு படுக்கச் சென்றவர் மறுநாள் காலையில் விழிக்கவே இல்லை.

Comments
Post a Comment
Your feedback