ஜனவரி 17, 1691
ரத்தத்தில் ஏதோ ஒன்றை சேர்ப்பதற்காகத்தான் சுவாசித்தல் நடைபெறுகிறது என்று முதன் முதலில் கண்டுபிடித்தவர் பிரிட்டனைச் சார்ந்த ரிச்சர்ட் லோயர் என்ற ஒரு மருத்துவர் அறிஞர் . இவர் தான் முதன்முதலாக ரத்தத்தை மாற்றுவதற்கு முயன்றவர். அவர் இன்று லண்டனில் காலமானார்.
ஜனவரி 17,1705
தாவர வகைகளைப் பற்றி மூன்று தொகுதிகள் கொண்ட ஹிஸ்டாரிக்கா பிளான்ட்ரம் HISTORICA PLANTRUM என்னும் கலைக்களஞ்சியத்தை எழுதிய பிரிட்டனைச் சேர்ந்த ஜான்ரே இன்று காலமானார்.
ஜனவரி 17,1706
பெஞ்சமின் பிராங்கிளின் பிறந்த தினம். ஒரு விஞ்ஞானி எழுத்தாளராக அரசியல்வாதியாக இலக்கியவாதியாக வியாபாரியாகவெல்லாம் இருக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டான மனிதர் இவர்.
இன்றைய அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் இவரும் ஒருவர். அறிவியல் பாடத்திலும் அமெரிக்க வரலாற்றிலும் இடம்பெற்ற ஒரு புகழ்பெற்ற பெயர் பெஞ்சமின் பிராங்கிளின்.
ஜனவரி 17,1978
நம் நாட்டில் ஆயிரம், ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
ஜனவரி 17,1917
தமிழக முன்னாள் முதல்வர் M.G.இராமச்சந்திரன் பிறந்த நாள்.
ஜனவரி 17,1981
மிசோரம் தனி மாநிலமாக உதயமானது.
ஜனவரி 17, 2005
சென்னை கம்பன் கழகத்தின் நிறுவனர்களுள் ஒருவரும் உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்தவருமான மு.மு. இஸ்மாயில் மறைந்த நாள்.
ஜனவரி 17, 2010
நீண்ட காலம் தொடர்ந்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பெருமைக்குரிய ஜோதி பாசு மறைந்த நாள். 1977ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க முதலமைச்சராக இருந்தவர் இவர்.

Comments
Post a Comment
Your feedback