மார்ச் 2, 1896 ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்த நாள். அடுக்குமொழி, எதுகை, மோனை, இலக்கியத் தொடர் மூன்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்த சேதுப்பிள்ளையைப் பாராட்டி தருமபுர ஆதீனம் 1950-ஆம் ஆண்டு 'சொல்லின் செல்வர்' என்னும் விருதை வழங்கியது. மார்ச் 2, 1931 ஒன்றுபட்ட சோவியத் யூனியனின் கடைசி ஆட்சித் ஜனாதிபதியாக இருந்த மிக்கைல் கொர்பச்சோவ் பிறந்த நாள். 1990இல் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மார்ச் 2, 1935 வயலின் கலைஞரும் இசையமைப்பாளருமான குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்த நாள். கர்நாடக இசையை வயலினில் வாசித்தவர்களுள் இவர் முக்கியமானவர். நெற்றி முழுவதும் நீண்ட திருநீற்றுப் பட்டையும் பெரிய குங்குமப் பொட்டும் இவரது தனி அடையாளம். சங்கீத ஞானம் இல்லாமலும் வயலின் இசையை ரசிக்க முடியும் என்பதை நிரூபித்தவர் இவர். மார்ச் 2, 1949 இந்தியாவின் கவிக்குயில் என்று மகாத்மாவால் அழைக்கப்பட்டவரும் சுதந்திர இந்தியாவின் முதல் பெண் கவர்னருமான சரோஜினி நாயுடு இன்று காலமானார். மார்ச் 2 1984 கொடைக்கானலில் அ...