மே 8, 1794
நவீன வேதியலின் தந்தை என்று போற்றப்படும் பிரெஞ்சு விஞ்ஞானி லாரன்ட் லவாய்சியா பாரிசில் காலமானார்.
எரிதல் Burning என்பது ஆக்சிஜன் உதவியுடன் தான் நடைபெறுகிறது என்று கண்டுபிடித்துக் கூறியவர் இவர்.
பொருள்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது; ஆனால் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்றும் இவர் நிரூபித்தார்.
மே 8, 1901
கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்த வறட்சி காரணமாக இந்தியாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்ச நிலைமையை ஆராய்வதற்காக பிரிட்டிஷ் அரசு அமைத்த குழு ஒரு அறிக்கையை இன்று வெளியிட்டது. இதில் பஞ்சம் காரணமாக 12 லட்சம் மக்கள் பட்டினியால் இறந்து விட்டனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மே 8,1915
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் அமின் சந்த் இன்று தூக்கிலிடப்பட்டார்.
மே 8,1916
உலகமெங்கிலும் இந்தியப் பண்பாட்டையும் ஆன்மிக ஞானத்தையும் உலகமெல்லாம் பரப்பிய சுவாமி சின்மயானந்தா பிறந்த நாள்.
பெரியம்மை நோய் அடியோடு ஒழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
மே 8,1980
தமிழறிஞர் மயிலை.சீனி வேங்கடசாமி காலமானார்.
மே 8, 2005
வார்த்தைச் சித்தர் என்று அழைக்கப்பட்ட வலம்புரி ஜான் மறைந்த நாள்.
'பேசாத நாளெல்லாம் பிறவாத நாளே' என்று அடிக்கடி சொல்லிவந்தவர். ஒவ்வொரு நாளும் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.
நாடாளுமன்ற முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை முன்னாள் உறுப்பினர் என்று அரசியல் அரங்கிலும் வலம் வந்தவர்.

Comments
Post a Comment
Your feedback