மே 3, 1788
முதல் மாலை நாளிதழ் ஸ்டார் லண்டனிலிருந்து வெளிவரத் துவங்கியது.
மே 3,1899
பேனா மன்னன் என்று அழைக்கப்படும் T.S.சொக்கலிங்கம் பிள்ளை பிறந்த நாள். இவர் தமிழின் முதன்மையான மொழிபெயர்ப்பாளர். டால்ஸ்டாயின் War and Peace என்ற நாவலை போரும் அமைதியும் என்ற பெயரில் மொழிபெயர்த்தவர் இவர் . தினமணி நாளிதழின் உருவாக்கத்துக்கு இவர் முக்கியமான பங்காற்றியவர். தமிழில் நவீன இலக்கியம் உருவாக வழியமைத்தவர். மணிக்கொடி இதழ், நவயுகம் பிரசுரம் ஆகியவை அவருடைய சாதனைகள்.
மே 3,1913
முதல் இந்தியத் திரைப்படமான ராஜா அரிச்சந்திரா பம்பாயில் காரனேசன் சினிமாட்டோகிராப் திரையரங்கில் திரையிடப்பட்டது.
மே 3, 1917சிப்பாய் கலகம் இன்று ஏற்பட்டது.
மே 3, 1935
எழுத்தாளர் சுஜாதாபிறந்த நாள்.
சுஜாதா எனும் புனைபெயரில் எழுதி வந்த இவருடைய இயற்பெயர் ஸ்ரீரங்கராஜன். பொறியாளரான இவர் எழுத்துத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இலக்கியமாகவும் இலக்கியம் தாண்டியும் இவருடைய படைப்புகள் பேசப்பட்டன. 100க்கும் மேற்பட்ட நாவல்கள், 250 சிறுகதைகள், 10 அறிவியல் நூல்கள்,சில நாடகங்கள் மற்றும் கவிதைகளை எழுதியுள்ளார்.
திரைப்படத் துறையிலும் வெற்றிகரமான ஆளுமையாக வலம் வந்தவர். ரோஜா, இந்தியன், அந்நியன், முதல்வன், ஜீன்ஸ், கன்னத்தில் முத்தமிட்டால், எந்திரன் என இவர் கைவண்ணத்தால் உயிர்பெற்ற பல படங்கள் இன்றும் பேசப்படுகின்றன.
மே 3, 1945
லட்சுமி காந்தன் கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிரபல நகைச்சுவை நடிகர் என் எஸ் கிருஷ்ணனுக்கும் தமிழ் திரைப்பட உலகின் அன்றைய முடி சூடா மன்னர் எம்கே தியாகராஜ பாகவதருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.
மே 3,1969
சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.
மே 3,1969
இந்தியாவின் மூன்றாவது ஜனாதிபதியான ஜாகிர் உசேன் காலமானார்.

Comments
Post a Comment
Your feedback