மே 6, 1840
பசை தடவிய தபால் தலைகள் முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யவும் பயன்படுத்தவும் ஆரம்பிக்கப்பட்டது.
மே 6, 1854
இந்தியாவில் முதல் அஞ்சல் தலை இன்று வெளியிடப்பட்டது.
மே 6, 1856
மனித உளப் பகுப்பாய்வியல் என்ற துறையைக் கண்டுபிடித்த சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud) இன்று பிறந்தார்.
மே 6, 1952
மரியா மாண்டிசோரி காலமானார்.
மே 6, 1991
லண்டனில் சென்ட் மார்ட்டின் தியேட்டரில் அகதா கிறிஸ்டியின் The Mousetrap நாடகத்தின் 16,000 ஆவது நாள் காட்சி நடந்தது. உலகில் வேறு எந்த காட்சியும் தொடர்ந்து இவ்வளவு நாள் நடந்ததில்லை. இந்த நாடகம் முதலில் அம்பாசிடர் தியேட்டரில் 1952 ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி துவங்கியது. அங்கு 8,862 காட்சிகள் நடைபெற்றன. பின்னர் 1974 ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி முதல் இந்த தியேட்டரில் நடத்திக்காட்ட ஆரம்பிக்கப்பட்டது.

Comments
Post a Comment
Your feedback