மே 16, 1843
தந்தி அனுப்பும் முறைக்கு காப்புரிமம் பெற்ற வில்லியம் ஹூக் என்பவரிடமிருந்து ஹோம் என்பவர் ஆண்டு வாடகைக்கு உரிமம் வாங்கி வாணிப நோக்குடன் முதல் தந்தியை இன்று அனுப்பினார். பாட்டிங்டன் என்னும் இடத்திலிருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஸ்லோ என்னும் ஊருக்கு இன்று முதல் தந்தி அனுப்பப்பட்டது.
மே 16, 1921
கணையத்தின் ஹார்மோன் சுரக்கும் தன்மையைப் பற்றிய ஆராய்ச்சியை சர் கிராண்ட் பாண்டிங்கும் சி.ஹெச். பெஸ்ட்டும் ஆரம்பித்த நாள் இன்று. இந்த ஆராய்ச்சியின் முடிவு தான் இன்சுலின் கண்டுபிடிப்பு. நீரிழிவு நோயினால் அவதிப்படுவோரின் தொல்லையைப் போக்குகின்ற மருந்து இன்சுலின் இப்படித்தான் பிறந்தது.
மே 16, 1929சிறந்த திரைப்பட நடிகர் நடிகைகளுக்கு ஆஸ்கார் விருது முதன்முதலாக வழங்கப்பட ஆரம்பித்தது. அப்போது இந்த விருதுக்கு ஆஸ்கார் என்று பெயர் இல்லை.
1931 ஆம் ஆண்டு இந்த விருது வழங்கும் மோசன் பிக்சர்ஸ் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நூலக காப்பாளர் மார்க்கெட் சிலையை பார்த்துவிட்டு என் என் சித்தப்பா ஆஸ்கார் போலவே உள்ளது என்றாராம். இது அந்த அகடமி முழுவதும் பரவி விருதின் பெயரே ஆஸ்கார் என்று ஆகிவிட்டது.
இந்த விருது பெற்ற முதல் திரைப்படம் வின்க்ஸ் Wings சிறந்த நடிகர் ஜெர்மனியைச் சார்ந்த எமில் ஜானிங்; சிறந்த நடிகை ஜானட் கெயினர்.
மே 16, 1975
ஜங்கோ தாபை (Junko Tabei) என்னும் ஜப்பானியப் பெண்மணி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். எவரெஸ்ட் உச்சியை அடைந்த முதல் பெண்மணி என்று பெருமைக்கு இவர் தான் சொந்தக்காரர்.
மே 16, 1986
சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவரும் அறிவியலைக் கதை போல கூறியவருமான பெ.நா.அப்புசாமி காலமானார்.
மே 16, 2010
எழுத்தாளர் அனுராதா ரமணன் மறைந்த நாள். நாவல்களை மட்டுமன்றி பல சிறுகதைகளையும் எழுதிவந்தவர் இவர்.

Comments
Post a Comment
Your feedback