மே 26 ,1703
சாமுவேல் பெப்பிஸ் என்பவர் இங்கிலாந்து கடற்படையில் பணிபுரிந்தவர். 1660 ஆம் ஆண்டு முதல் 1669 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு நாளும் நடந்த சிறிய நிகழ்ச்சி, பெரிய நிகழ்ச்சி என அத்தனையையும் ஒன்று விடாமல் தனது டைரியில் எழுதி வந்தார். லண்டனில் பரவிய கொள்ளை நோய், 1662 ஆம் ஆண்டு லண்டனில் ஏற்பட்ட பெரிய தீ விபத்து, முந்தைய நாள் தான் பார்த்த நாடகம் முதலான அனைத்தையும் அவர் தன் டைரியில் எழுதி வந்தார்.
17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இங்கிலாந்து மக்களின் வாழ்க்கை முறைகளை டைரியின் மூலம் படம் பிடித்து காட்டிப் புகழ்பெற்ற இவர் இன்று காலமானார்.
மே 26 ,1897
மனோன்மணீயம் என்னும் கவிதை நாடகம் தந்த பேராசிரியர் சுந்தரம் பிள்ளை காலமானார்.
மே 26, 1934
”ஜெய் ஹிந்த்” எனும் முழக்கத்தை முதலில் முழங்கிய 'ஜெய் ஹிந்த் செண்பகராமன்' என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த செண்பகராமன்பிள்ளை மறைந்த நாள் இன்று.
1891ம் ஆண்டு செப்டம்பர் 15இல் பிறந்த செண்பகராமன்பிள்ளை 1934-ஆம் ஆண்டு மே மாதம் 26-ஆம் தேதி வரையில் வாழ்ந்தார்.
மே 26, 1937
ஆச்சி மனோரமாவின் பிறந்தநாள் .
1939-ல் திருவாரூர் மாவட்டம் ராஜமன்னார்குடியில் பிறந்தார் மனோரமா . பெற்றோர் வைத்த பெயர் கோவிந்தம்மாள்.
மனோரமா நடித்த முதல் சினிமா ‘மாலையிட்ட மங்கை’.
அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 1,300க்கு மேல். இதனால் ‘கின்னஸ்’ உலக சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்றார்.
மனோரமாவை சினிமாவுக்கு அறிமுகம் செய்தவர் கவியரசர் கண்ணதாசன்!
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளில் நடித்த மனோரமா 2015 அக்டோபர் 10 சென்னையில் காலமானார்.
திருவள்ளுவர் காலம் ஆற்றங்கரை நாகரீகம் முதலான நூற்றுக்கணக்கான நூல்களை தந்த ஆராய்ச்சி அறிஞர் மா.இராசமாணிக்கனார் காலமானார்.
மே 26 ,1972
திருமுறைச் செல்வர் கு நடேச கவுண்டர் காலமானார்.
சமஸ்கிருத நூல்கள் பலவற்றை தமிழில் மொழிபெயர்த்தவர் 40க்கு மேற்பட்ட நூல்கள் எழுதிய இவர் தையல்காரர் ஆக வாழ்க்கை துவக்கியவர் தனியாக தமிழார்வம் மதுரை தமிழ் சங்கத் தேர்வில் வெற்றி பெறச் செய்ததுடன் செந்தமிழ் கவிமணி ஆகவும் ஆகிற்று.
மே 26 ,1989
பன்மொழிப்புலவர் எனப் பெயர் பெற்ற கா. அப்பாத்துரை இன்று மறைந்தார்.
மே 26 , 2006
ஜாவாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 5,700 பேர் உயிரிழந்து, 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.

Comments
Post a Comment
Your feedback