மே 24, 1801
பாஞ்சாலங்குறிச்சி படுகொலை நடந்த நாள் இன்று.
பிப்ரவரி இரண்டாம் தேதி பாளையங்கோட்டை சிறையில் இருந்து தப்பிய ஊமைத்துரை தரைமட்டமாகியிருந்த பாஞ்சாலங் குறிச்சிக் கோட்டையை ஏழே நாளில் கட்டி முடிக்க, ஆங்கிலேய படை ஒன்பதாம் தேதி முதல் மீண்டும் கோட்டையை முற்றுகையிட்டு தகர்க்க முயன்றது. 104 நாட்கள் இந்த முற்றுகை நீடித்தது.
இறுதியாக கோட்டையைக் கைப்பற்றவும் அங்கிருந்து மக்களை வெளியேற்றவும் ஆங்கிலேயப் படைகள் கோட்டையில் புகைக் குண்டுகளை வீச கோட்டை முழுவதும் புகை மண்டியது.
சில குண்டுகள் வெடித்துத் சிதறி தீப்பற்றியது. இதனால் கோட்டையில் உள்ள நிலவறைக்குள் இருந்த ஏராளமான பெண்களும் குழந்தைகளும் மூச்சுத் திணறி இறந்தனர்.
புகையினால் கண்களில் எரிச்சல் ஏற்பட வெளியே ஓடி வந்தவர்கள் எரியும் நெருப்பில் விழுந்தனர். பஞ்சாப் ஜாலியன் வாலாபாக் படுகொலையை விடக் கொடூரமானது இந்த பாஞ்சாலங்குறிச்சிப் படுகொலை. 104 நாட்களாக நடந்த அந்தப் போர் இன்றுடன் முடிவடைந்தது.
மே 24,1973
முத்தமிழ்மணி மு.அருணாசலம் பிள்ளை இன்று காலமானார்.
மே 24, 1975
பெரியம்மை நோய் (small pox) இன்று தான் கடைசியாக கண்டறியப்பட்டது.
இந்த நாளுக்குப் பின் அந்நோய் முற்றாக மறைந்துவிட்டது.
மே 24, 1981
சாதாரண மக்களையும் பத்திரிகை படிக்கத் தூண்டிய சி.பா ஆதித்தனார் காலமானார்.
மே 24,1994
இந்தியாவின் சிறந்த விமானியும் தொழிலதிபருமான விஜய் பட் சிங்கானியா 33,523 கிலோமீட்டர் உலகைச் சுற்றிவரும் உலக விமானப் போட்டியில் முதலாவதாக வந்து வெற்றி பெற்றார்.
மே மாதம் முதல் தேதி கனடாவில் தொடங்கிய பந்தயம் இன்று அங்கேயே முடிவடைந்தது.
அகில உலக விமானக் கழகத்தின் தங்கப் பதக்கம் பெற்ற முதல் இந்தியர் இவர் தான்.
மே 24,1994
மதினா நகரத்திலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மினா என்னும் புனித தளத்தில் சாத்தான் மீது கல்லெறிதல் என்னும் சடங்கின் போது ஏற்பட்ட நெரிசலில் 259 ஹஜ் பயணிகள் மிதிபட்டு நசுங்கி இறந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.

Comments
Post a Comment
Your feedback