மே 5, 1760
முதன் முதலில் குழியுடன் கூடிய தூக்கு மேடை அமைக்கப்பட்டது.
மே 5, 1821
சைட் ஹெலினா தீவில் செயின்ட் வெளிநாட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த நெப்போலியன் காலமானார். உலகின் மிகச்சிறந்த தளபதிகளில் ஒருவரான இவர் வயது 53.
மே 5, 1903
அவிநாசிலிங்கம் மனையியல் நிகர்நிலை பல்கலைக் கழக நிறுவனர் அவிநாசிலிங்கம் செட்டியார் பிறந்த நாள். அப்போதைய மதராஸ் மாகாணத்தில் கல்வி அமைச்சராக இருந்தவர் இவர்.
மே 5, 1916
பழம்பெரும் திரைப்பட நடிகர் பி. யு. சின்னப்பா பிறந்த நாள்.
மே 5, 1916
இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த ஜெயில் சிங் இன்று பிறந்தார்.
5 மே 1922
நடிகை டி. ஆர். ராஜகுமாரி பிறந்த தினம்.
அன்றைய முன்னணிக் கதாநாயகர்களான எம். கே. தியாகராஜ பாகவதர், பி. யு. சின்னப்பா, டி. ஆர். மகாலிங்கம் போன்றோரின் படங்களில் கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றவர் இவர். நடனத்திலும் பாடல்கள் பாடுவதிலும் திறமை கொண்டிருந்தவர்.
தியாகராஜ பாகவதருடன் சேர்ந்து இவர் நடித்திருந்த ஹரிதாஸ் படம் தான் இன்று வரை அதிக நாட்கள் ஓடிய படம் என்ற சாதனையைப் பெற்றுள்ள படம். அந்தப் படம் 1945 தீபாவளியன்று வெளியாகி தொடர்ந்து 110 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது.
சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராகவும் அண்ணாமலை பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் பணியாற்றி பெருமை பெற்ற ஆர்.கே.சண்முகம் செட்டியார் காலமானார்.
மே 5,1956
நியூயார்க் டைம்ஸ் உலகிலேயே அதிக பக்கங்களுடன், அதாவது 516 பக்கங்களுடன் வெளிவந்தது.
மே 5,1957
நகைச்சுவை நாவல், சிறுகதைகள், கட்டுரைகள் என்று எழுதிய எல்லாப் படைப்புகளிலும் நகைச்சுவை கலந்தே எழுதிவந்த எழுத்தாளர் தேவன் மறைந்த நாள். துப்பறியும் சாம்பு கதைகள் மிகுந்த புகழ் பெற்றவையாக விளங்கிய காலம் இருந்தது. துப்பறியும் சாம்பு இவரது படைப்புத் தான். பாகும்.
மே 5, 1733
அகில உலக குத்துச்சண்டை போட்டி முதன் முதலில் லண்டனில் நடைபெற்றது.
மே 5, 2021
கிராமிய இசைப்பாடகரும் நடிகருமான டி.கே.எஸ்.நடராஜன் மறைந்த நாள்.
தெம்மாங்குப் பாடலில் கிடைக்காத புகழ் திரைப்படத்தில் இவர் பாடிய ஒரு பாடலில் கிடைத்தது. 'என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி யாரு வச்ச மையி இது நா வெச்ச மையி' என்ற பாடல் தான் அந்தப் பாடல்.

Comments
Post a Comment
Your feedback