மே 4,1799
திப்பு சுல்தான் போரில் உயிர்நீத்த தினம்.
மைசூரின் புலியென அழைக்கப்பட்ட திப்புசுல்தான் நான்காம் மைசூர்ப் போரில் பிரிட்டிஷ் படையால் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இன்று கொல்லப்பட்டார். ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டை பிரிட்டிஷாரால் முழுமையாக கைப்பற்றப்பட்டு யூனியன் ஜாக் கொடி பறக்க விடப்பட்டது.
திப்புசுல்தானின் மைந்தர்களும் மற்ற உறவினர்களும் கைது செய்யப்பட்டு கைவிலங்கு கால்விலங்கு பூட்டப்பட்டு வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். இவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தான் பின்னர் வேலூர் புரட்சி ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தன.
மே 4,1854இந்தியாவின் முதல் தபால் தலை இன்று வெளியிடப்பட்டது.
மே 4,1927
அமெரிக்க திரைப்படத் துறையைச் சேர்ந்த 30 பேர் கூடி தரமான திரைப்படம் தயாரிப்பதை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் விருதுகள் கொடுக்கத் தீர்மானித்தனர். அதன்படி இந்த அகடமி ஆப் மோசன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பை உருவாக்கினார். ஆண்டு தோறும் ஆஸ்கர் விருதுகளை வழங்குவது இந்த அமைப்புதான்.
மே 4, 1979
பிரிட்டனின் முதல் பெண் பிரதம மந்திரியாக திருமதி மார்க்கெட் தாட்சர் தேர்வு செய்யப்பட்டார். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் இவர்.
மே 4, 1990
இந்தியாவின் முதல் சூரிய வெப்பத்தில் இயங்கும் மின் நிலையம் ஹரியானாவில் குவாய் பகாரி என்னும் இடத்தில் துவக்கி வைக்கப்பட்டது.

Comments
Post a Comment
Your feedback