மே 29, 1829
சோடியம் பொட்டாசியம் கால்சியம் மெக்னீசியம் முதலான தனிமங்களை கண்டுபிடித்தவர் நிலக்கரி சுரங்கத்துக்குள் பயன்படுத்த அபாயம் இல்லாத ஒரு விளக்கை வடிவமைத்து கொடுத்தவருமான பிரிட்டிஷ் விஞ்ஞானி சர் ஹம்பிரிடேவி இன்று காலமானார்.
மே 29, 1919
எர்னெஸ்ட் ரூதர்போர்ட் நைட்ரஜனின் மீது ரேடியம் கதிர்களை பாய்ச்சி அதை ஆக்சிஜனாக மாற்றினார். ஒரு வேதியியல் தனிமம் செயற்கை முறையில் இன்னொரு தனிமமாக மாற்றப்படுவது இதுவே முதல் முறை.
மே 29,1948:
ஐ.நா. அமைதிப் படை இன்று நிறுவப்பட்டது.
மே 29, 1953
டென்சிங் மற்றும் ஹில்லாரி இருவரும் முதல் முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்தனர்.
மே 29, 1972
இந்தி நடிகர்களான ராஜ் கபூர், ஷமி கபூரின் தந்தையும் பிரபல இந்தி நடிகருமான பிருத்திவிராஜ் கபூர் மரணமடைந்தார்.
மே 29, 1985
சென்னை வரலாற்றின் சின்னமாக விளங்கிய மூர் மார்க்கெட் தீப்பிடித்து அழிந்தது.
முன்னாள் பிரதம மந்திரி சரண்சிங் காலமானார்.
மே 29, 1987
கோவா இந்தியாவின் 25 ஆவது மாநிலமாக உதயமானது.

Comments
Post a Comment
Your feedback