மே 13, 1646
ஷாஜகான் கட்டத் தொடங்கிய டெல்லி செங்கோட்டை இன்று கட்டி முடிக்கப்பட்டது.
மே 13, 1904பாரதத்தின் தலைசிறந்த தொழில் அதிபரான ஜாம்ஜெட்ஜி டாடா காலமானார்.
மே 13, 1920
மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே என்ற பாடலை எத்தனையோ முறை கேட்டு அதில் லயித்திருப்போம்.
‘குங்குமப்பூவே... கொஞ்சும்புறாவே...’ என்று சந்திரபாபுவின் குரலில் வரும் பாடலை இப்போது கேட்டாலும் ஒரு குழந்தைத்தனமும் குதூகலமும் நமக்குள் வந்துபோவதை அனுபவித்திருப்போம்.
அந்தப் பாடல்களை எழுதியவரான பாடலாசிரியர் கு.மா.பாலசுப்பிரமணியம் பிறந்த நாள் இன்று.
சுதந்திர இந்தியாவின் பாராளுமன்றம் இன்று முதல் செயல்படத் தொடங்கியது.
மே 13,1956
வாழும் கலை என்ற அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் பிறந்த நாள்.
S.ராதாகிருஷ்ணன் இன்று இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரானார்.
மே 13, 1967
ஜாகிர் உசேன் இன்று இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவரானார்.
மே 13, 2000
'கவிஞாயிறு' என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட கவிஞர் தாராபாரதி மறைந்த நாள். இராதாகிருஷ்ணன் என்ற தன்னுடைய பெயரை தாராபாரதி என மாற்றிக்கொண்டவர் இவர்.
மே 13, 2001
உலக அளவில் புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளரும் இந்திய நாவல் ஆசிரியருமான ஆர்.கே.நாராயணன் மறைந்த நாள்.
ஆர். கே. நாராயணன் என்பது ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணன் என்பதன் சுருக்கம்.
தன்னுடைய நாவல்களுக்காக இவர் உருவாக்கிய மால்குடி என்ற ஒரு கற்பனை கிராமம் உலகம் முழுவதும் புகழ்பெற்று ஒரு புது வரலாறு படைத்தது.
அந்தப் பெருமை என்றும் நிலைத்திருக்கும் வகையில் ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மால்குடி எக்ஸ்பிரஸ் என இந்திய ரயில்வே பெயர் வைத்துள்ளது.
16024 MALGUDI EXPRESS, YELHANKA JN (YNK) To MYSURU JN (MYS)

Comments
Post a Comment
Your feedback