மே 10,1526
முதலாம் பானிபட் போரில் வென்ற பாபர் இன்று ஆக்ராவுக்குள் நுழைந்தார்.
மே 10, 1857
சிப்பாய் கலகம் என்று பிரிட்டிஷாரால் வர்ணிக்கப்பட்ட முதல் இந்திய விடுதலைப் போர் மீரட்டில் துவங்கியது. இந்தப் போர் டெல்லிக்குப் பரவிய மறுநாள் (மே 11ஆம் தேதி) பகதூர்ஷா மன்னராக அறிவிக்கப்பட்டார்.
மே 10,1901
லண்டனில் ராயல் சொசைட்டி ஹாலில் நூற்றுக்கணக்கான அறிவியல் அறிஞர்கள் முன்னிலையில் நம் நாட்டின் அறிவியல் அறிஞர் ஜெகதீஸ் சந்திரபோஸ் தாவரங்களுக்கும் உணர்ச்சிகள் உள்ளன என்பதை பல ஆய்வுகள் மூலம் மெய்ப்பித்துக் காட்டினார்.
நாஜி பிரச்சார அமைச்சர் கோயபல்சின் தூண்டுதல் காரணமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பெர்லினில் நள்ளிரவில் கூடி புத்தக எரிப்புப் போராட்டம் நடத்தினர்.
ஜெர்மனியின் பண்பாட்டிற்குப் புறம்பான நூல்கள் என்று கூறி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தாமஸ் மான் முதலான ஜெர்மனி எழுத்தாளர்கள் நூல்களையும் H.G.Wells, ஹெலன் கெல்லர், சிக்மண்ட் பிராய்ட் போன்றோர் எழுதிய நூல்களையும் கொளுத்தினர். ஏறக்குறைய 25 ஆயிரம் நூல்கள் தீக்கிரையாயின.
மே 10,1981
தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்த சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்து விடவே பிரதம மந்திரியான தன் தாயார் இந்திரா காந்திக்கு உதவி புரிய ராஜீவ் காந்தி அரசியலில் நுழைந்தார். அமேதி தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.
மே 10,1994
தென் ஆப்பிரிக்கா அதிபராக நெல்சன் மண்டேலா பதவியேற்றார்.
மே 10, 2019
தமிழ், மலையாள மொழிகளில் படைப்புகளைத் தந்த எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைந்த நாள்.
இவரது நாவலான சாய்வு நாற்காலி சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல்.

Comments
Post a Comment
Your feedback