மே 28, 1742
முதல் நீச்சல் குளம் லண்டனில் லெமன் தெருவில் திறந்து வைக்கப்பட்டது.
மே 28,1923
பிரபல திரைப்பட நடிகரும் ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும் முன்னாள் ஆந்திர முதலமைச்சருமான N.T.ராமராவ் இன்று பிறந்தார்.
மே 28,1998பாகிஸ்தான் இன்று ஐந்து அணுகுண்டு சோதனைகளை நிகழ்த்தியது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சில நாடுகள் அந்நாட்டுக்கெதிராக பொருளாதாரத் தடைகளை அறிவித்தன.
மே 28,1999
ஜெகன் மோஹினி உள்ளிட்ட புகழ் பெற்ற திரைப்படங்களின் இயக்குநர் பி. விட்டலாச்சாரியா மறைந்த தினம் இன்று.
மாயாஜாலக் காட்சிகள் என்றாலே விட்டலாச்சாரியா படம் என்று சொல்லும் அளவு பெயர் பெற்றிருந்தார்.
1920 ஜனவரி 20இல் கர்நாடகாவில் பிறந்த அவர் 1999 மே 28 இல் மறைந்தார்.
மே 28, 2008
240-ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்து, நேபாளம் குடியரசாக இன்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது மக்கள் மீண்டும் மன்னராட்சி வேண்டும் என்று போராடிக்கொண்டிருப்பது குடியாட்சி எப்படி நடக்கிறது என்பதற்கு சாட்சியாக விளங்குகிறது.

Comments
Post a Comment
Your feedback