மே 20, 1506
புதிய உலகம் என்று கூறப்பட்ட அமெரிக்காவை கண்டுபிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் இன்று காலமானார்.
மே 20, 1851
ஆட்டோமொபைல் துறையில் முத்திரை பதித்த யமஹா நிறுவனத்தன் நிறுவனர் டொரகுசு யமஹா ஜப்பானில் இன்று பிறந்தார்.
யமாஹா நிறுவனம் ஆட்டோமொபைல் துறையில் மட்டுமல்லாது இசைக்கருவிகள் உற்பத்தியிலும் உலகப் புகழ் பெற்ற நிறுவனமாகும்.
மே 20, 1894
காஞ்சி மகா பெரியவர் என்று அழைக்கப்பட்ட சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் பிறந்த நாள்.
இவர் வழங்கிய அருளுரைகளில் இடம் பெற்ற தத்துவங்களின் தொகுப்பாக வெளிவந்த தெய்வத்தின் குரல் எனும் நூல் ஒரு புகழ் பெற்ற நூலாகும்.
விடுதலைப் போராட்ட வீரர் பிபின் சந்திர பால் இன்று மறைந்தார்.
மே 20, 1932
தமிழ் அறிஞர்களில் பலரது பெயர்கள் கூட நமக்கு தெரிவதில்லை தொல்காப்பியர் சொல், பொருள், எழுத்து அதிகாரங்களைப் பதிப்பித்த சி.வை.தாமோதரன் பிள்ளையை பற்றி ஒரு சிலருக்காவது தெரியும். ஆனால் அவருக்கும் சற்று முன்னதாகவே இந்தத் துறையில் காலடி வைத்தவர் பவானந்தம் பிள்ளை. அப்படி ஒருவர் இருந்தாரா என்று தோன்றும்.
தொல்காப்பியம் நூலின் மூன்றாம் இயலான பொருளதிகாரத்திற்கு நச்சினார்க்கினியர் உரையையும் பேராசிரியர் உரையையும் பதிப்பித்து வெளியிட்டவர் இவர். தன் கைக்காசு முழுவதையும் தமிழ் நூல்களை பதிப்பிக்க செலவு செய்தவர்.
1876 ஆம் ஆண்டு பிறந்த பேரறிஞர் பவானந்தம் பிள்ளை 1932 மே மாதம் 20 ஆம் நாள் மறைந்தார்.
மே 20, 1957
ஆந்திர கேசரி என்று அழைக்கப்பட்ட டி .பிரகாசம் இன்று காலமானார். பிரிட்டிஷாரின் துப்பாக்கிக்கு தன் மார்பைத் திறந்து காட்டி சுடும்படி கர்ஜித்த விடுதலை இயக்க வீரர் இவர். பல ஆண்டுகள் சிறையில் இருந்த தியாகியும் கூட.

Comments
Post a Comment
Your feedback