மே 15, 1721
எந்திரத் துப்பாக்கி லண்டனில் தயாரிக்கத் துவங்கப்பட்டது.
மே 15, 1930
கலிபோர்னியாவில் ஆக்லாந்து விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட போயிங் விமானத்தில் முதன் முதலாக மிஸ் எல்லன் சர்ச் என்னும் பெண் ஏர் ஹோஸ்டஸாக பணிபுரிய ஆரம்பித்தார்.
மே 15,1945
இந்திய தேசிய ராணுவம் சரணடைந்தது.
மே 15, 1990
பெருந் தமனிகள் இடம் மாறி அமைந்ததையும் வெண்ரிகில் தடுப்புச் சுவரில் அமைந்த கோளாறையும் நிவர்த்தி செய்வதற்கு பிறந்து ஆறு வாரமே ஆன குழந்தைக்கு டெல்லியில் AIIMS இல் இன்று இதய அறுவை சிகிச்சை நடந்தது.
இவ்வளவு சிறிய குழந்தைக்கு இந்தியாவில் நடந்த முதல் இதய அறுவை சிகிச்சை இது தான்.
மே 15,1993
காஞ்சி மடத்தில் காஞ்சி பெரியவரின் சமாதியான பிருந்தாவனம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
மே 15,1993
இந்திய ராணுவத்தின் முதலாவது தளபதியாக இருந்து பீல்ட் மார்ஷல் கரியப்பா பெங்களூரில் ராணுவ மருத்துவமனையில் இன்று தன் 94 வது வயதில் காலமானார்.

Comments
Post a Comment
Your feedback