மே 18, 1920 -
எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் பிறந்த நாள்.
சில ஆண்டுகள் வரை ஒவ்வொரு பள்ளியின் நூலகங்களிலும் நாட்டுக்கு உழைத்த நல்லவர் என்ற தலைப்பில் முக்கியமான தலைவர்களின் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றிருக்கும். அந்த வரிசையில் வந்த எல்லாத் தலைவர்களின் வரலாறையும் எழுதியவர் இவர் தான்.
இவர் எழுதிய "காதுகள்" என்ற நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. இவர் ஒரு கவிஞரும் கூட.
மே 18, 1955
இந்தியாவில் மதச்சடங்காக கருதப்படும் திருமணத்திற்கு சட்டபூர்வமாக பாதுகாப்பளிக்க இந்து திருமண சட்டம் இயற்றப்பட்டு இன்று அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
மே 18, 1966இந்தியாவின் புகழ்பெற்ற தாவரவியல் விஞ்ஞானி பஞ்சனன் மகேஸ்வரி இன்று காலமானார்.
மே 18, 1974
ராஜஸ்தானில் பொக்ரான் பாலைவனத்தில் இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது இதன் மூலம் இந்தியா அணு ஆயுதம் தயாரிக்கும் திறனுடைய ஆறாவது நாடாக மாறியது.
மே 18, 1983
மணிக்கொடி எழுத்தாளர் பி. எஸ். இராமையா மறைந்த தினம்.
எழுத்தாளரான இவர் பல திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். சில படங்களை இயக்கியுமுள்ளார்.

Comments
Post a Comment
Your feedback