ஜூன் 1 1884
உலகப் புகழ் பெற்ற தாவரவியல் அறிஞரும் மரபியல் துறையை உருவாக்கி வருமான க்ரிகோரி ஜான் மெண்டல் இன்று காலமானார்.
ஜூன் 1,1935
கார் ஓட்ட கற்றுக் கொள்ளும் போது எல் போர்டு மாட்டுவது பிரிட்டனில் இன்று கட்டாயமாக்கப்பட்டது.
மார்ஷல்
நேசமணி மறைந்த நாள்
இதே நாளில் தான் ஹெலன் கெல்லர் இவ்வுலகை விட்டு மறைந்தார்.
1880 ஜூன் 27 அன்று பிறந்த அவர் 18-ம் மாதத்தில் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
பிறகு பேசும், பார்க்கும் மற்றும் கேட்கும் திறன்களை இழந்தார். இருந்தாலும் மனம் தளராமல் பொருள்களைத் தடவி, முகர்ந்து பார்த்து அடையாளம் காணமுயன்றார் ஹெலன்.
ஹெலனுக்கு ஏழு வயதாக இருக்கும்போது அவரின் பெற்றோர் அலெக்ஸாண்டர் கிரஹம்பெல்லைச் சந்தித்தனர். கிரஹம்பெல்லின் ஆலோசனைப்படி ஹெலனின் பெற்றோர், பாஸ்டனில் இயங்கிவரும் பெர்க்கின்ஸ் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதினர். பெர்க்கின்ஸ் நிறுவனம் ஹெலனின் வாழ்க்கையை மலரச் செய்யும் வகையில் ஒரு பெண்ணை அனுப்பி வைத்தது. அவர்தான் ஆன் சல்லிவன்.
சல்லிவனின் அன்பும் அக்கறையும் ஹெலனுக்கு தொடர்ந்து 48 ஆண்டுகளுக்குக் கிடைத்தது.
ஹெலன் எப்போது கையில் வைத்திருக்கும் பொம்மையிலிருந்து கற்றுக்கொடுப்பதைத் தொடங்கினார்.
ப்ரெய்லி முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, கிரேக்கம், லத்தீன் உள்ளிட்ட மொழிகளைக் கற்றார் ஹெலன்.
ஹெலனின் வாழ்வில் மிக முக்கியமானது அவர் ரேட் கிளிஃப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததுதான். கடும் போராட்டங்களுக்குப் பிறகே அவருக்கு அனுமதி கிடைத்தது. அங்குதான் அவர் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். பார்வை, கேட்கும் மற்றும் பேசும் திறனற்ற ஒருவர் இளங்கலை முடித்தது அதுவே முதன்முறை. தனது 24 வயதில் முதுகலைப் பட்டமும் பெற்று வியப்பிலாழ்த்தினார்.
படிக்கும்போதே தி ஸ்டோரி ஆஃப் மை லைப் (the story of my life) என்ற தன் சுயசரிதை நூலை எழுதினார். அந்தப் புத்தகம் இதுவரை 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தனது குறைகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் உலகை வலம் வந்த ஹெலனை பக்கவாதம் வீட்டிலேயே முடக்கியது. 1968 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார்.
ஜூன் 1,1983
சூரிய ஆற்றலினால் இயங்கும் மின்விசை சைக்கிள் அதன் கண்டுபிடிப்பாளரான ஆலன் பிரிமான் என்பவரால் ஓட்டிக் காண்பிக்கப்பட்டது.
ஜூன் 1,1996
முன்னாள் குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி மறைந்த நாள். இவர் ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராகவும் இருந்தவர்.

Comments
Post a Comment
Your feedback