ஏப்ரல் 9, 1915
இன்றைய Virology துறை உருவாக காரணமாக இருந்தவர்களில் ஒருவரான Friedrich August Johannes Loffler இன்று ஜெர்மனியில் காலமானார்.
ஏப்ரல் 9, 1922
யானைக்கால் வியாதி ஒருவகைக் கொசுவினால் தான் பரவுகிறது என்பதை நிரூபித்த பிரிட்டிஷ் விஞ்ஞானி சர் பட்ரிக் மான்சன் லண்டனில் இன்று காலமானார்.
ஏப்ரல் 9, 1965
ராங் ஆஃப் கட்ச் பகுதியில் இந்திய பாகிஸ்தான் படைகளுக்கிடையே இன்று போர் மூண்டது.
ஏப்ரல் 9, 1992
பிரிட்டனின் நகைச்சுவை வார இதழான பஞ்ச் இன்னும் பத்திரிகையில் கடைசி இதழ் இன்று வெளியானது.
151 ஆண்டுகளாக தொடர்ந்து வெளி வந்து கொண்டிருந்த இந்தப் பத்திரிகையின் கடைசி இதழ் 70000 பிரதிகளே அச்சடிக்கப்பட்டன. மேற்குத் திசையில் சூரியன் அஸ்தமிக்கும் காட்சியை மிஸ்டர் பஞ்ச் அவரது நண்பரோடும் நாய் டோபியுடனும் மிக வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருப்பது போல அட்டைப்படம் போடப்பட்டிருந்தது.
ஏப்ரல் 9, 2024
முன்னாள் அமைச்சரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.. வீரப்பன் மறைந்த நாள்.
எம்.ஜி.ஆர் தான் தொடங்கிய ""எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் " நிறுவன நிர்வாகத்தை அவரிடம் தான் ஒப்படைத்திருந்தார். பின்னாளில் இவர் "சத்யா மூவிஸ்" என்ற பெயரில் தனியாக ஒரு படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி பல வெற்றிப் படங்களைத்தைத் தந்தார்.

Comments
Post a Comment
Your feedback