ஏப்ரல் 19,1824
பைத்தியம் கொடியவன் ஆபத்தானவன் என்றெல்லாம் தன் காதலியாலேயே வருணிக்கப்பட்டவரும் தன் வாழ்நாளிலேயே உலகப் புகழ்பெற்ற முதல் ஆங்கில கவிஞருமான லார்ட் பைரன் கிரீஸ் நாட்டில் ஒரு வகைக் காய்ச்சலினால் காலமானார்.
ஏப்ரல் 19, 1882
பரிணாமக் கொள்கையை அறிவித்த சார்லஸ் டார்வின் இன்று காலமானார்.
ஏப்ரல் 19, 1906
மேரி கியூரியின் கணவர் பியாரி கியூரி மரணமடைந்தார்.
அறிவியல் கருத்தரங்கில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பும் போது பாரிஸ் தெருவில் பியாரி கியூரி மீது ஒரு குதிரை வண்டி மோதி கீழே தள்ளியது. அப்போது எதிர்ப்புறமாக வந்து கொண்டிருந்த பாரவண்டி அவர் மீது ஏறியதால் அவர் அந்த இடத்திலேயே மரணம் அடைந்தார். 1904 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் இவரும் ஒருவர்.
ஏப்ரல் 19, 1944
W.O.ஹியூம், தாதாபாய் நவரோஜியுடனிருந்து காங்கிரஸ் மகாசபையை ஆரம்பித்தவரும் ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்த நாகபுரி காங்கிரசுக்கு தலைமை வகித்தவரும் விடுதலைப் போராட்ட வீரருமான சேலம் சி.விஜயராகவாச்சாரியார் இன்று காலமானார்.
ஏப்ரல் 19, 1951
உலக அழகி போட்டி முதன் முதலில் ஸ்ட்ராண்ட் என்னுமிடத்தில் நடைபெற்றது. முதல் உலக அழகியாக ஸ்வீடனைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவரின் 21 வயது மகள் தேர்ந்தெடுக்கப்பட்டாள். பெயர் மிஸ் கீகி ஹாக்கோன்சன். போட்டியில் 30 அழகிகள் கலந்து கொண்டனர்.
ஏப்ரல் 19, 1975
விண்வெளி யுகத்தில் இந்தியா அடி எடுத்து வைத்த நாள் இன்று. இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா இன்று செலுத்தப்பட்டது.

Comments
Post a Comment
Your feedback