ஏப்ரல் 6, 1815
உ.வே.சாமிநாதையரின் ஆசிரியரான ‘மகாவித்வான்’ மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிறந்த நாள்.
ஏப்ரல் 6, 1909
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களைத் தோற்றுவித்த வள்ளல் அழகப்பச் செட்டியார் பிறந்த நாள்.
ஏப்ரல் 6, 1950
இதற்குக் கொடுக்கப்படும் விலையைக் கொண்டு உலக மக்கள் அனைவருக்கும் இரண்டு நாட்கள் வயிறார உணவு கொடுக்க முடியும் என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்பட்ட உலகப் புகழ் பெற்ற கோஹினூர் வைரம் இன்று இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
ராபர்ட் எட்வின் பியரி இன்று வடதுருவத்தை முதன் முதலில் சென்றடைந்தார்.
ஏப்ரல் 6, 1919
ரௌலட் சட்டத்தை எதிர்த்து காந்தி இன்று பொது வேலைநிறுத்தத்தைத் தொடங்கினார்.
ஏப்ரல் 6, 1930
காந்தி தலைமையில் தண்டியில் உப்பு சத்தியாகிரகம் நடந்தது. அதே நேரத்தில் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் 96 தியாகிகள் உப்பு சத்தியாகிரகம் செய்து சிறைக்குச் சென்றனர்.
ஏப்ரல் 6, 1938
இயற்கை வேளாண் அறிவியல் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் பிறந்த நாள்.
ஏப்ரல் 6, 1980
ஜனதா கட்சியிலிருந்து பிரித்து பாரதீய ஜனதா கட்சி இன்று தனியாகத் தொடங்கப்பட்டது.
ஏப்ரல் 6, 1984
ரத்தக் கண்ணீர் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்களான இருவரில், இயக்குநர் பஞ்சு மறைந்த நாள்.

Comments
Post a Comment
Your feedback