24 ஏப்ரல் 1934
தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தவரான ஜெயகாந்தன் பிறந்த நாள்.
இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய பல படைப்புகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன.
சில நேரங்களில் சில மனிதர்கள் ,ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் போன்ற இவரது படைப்புகள் புகழ் பெற்றவை.
24 ஏப்ரல் 1936
தமிழறிஞர் ஔவை து. நடராசன் பிறந்த நாள்.
ஆங்கிலம் தமிழ் இரண்டு மொழிகளிலும் நிபுணத்துவம் பெற்றவர் இவர். ஆங்கிலத்திலும், தமிழிலும் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் கூட.
24 ஏப்ரல் 1937
இசைத்துறையில் சூலமங்கலம் சகோதரிகள் என்று அழைக்கப்படும் சகோதரிகள் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி ஆகிய இருவரில் ஒருவரான ஜெயலட்சுமி பிறந்த தினம்.
சூலமங்கலம் சகோதரிகள் பாடிய கந்த சஷ்டி கவசம் உலகம் முழுதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
ஏப்ரல் 24, 1945
பர்மாவின் வீழ்ச்சி உறுதியானதும் ஜப்பானியரைத் தொடர்ந்து நேதாஜியும் அங்கிருந்து வெளியேறினார். அப்போது அவர் இந்திய தேசிய ராணுவத்திற்கு "இந்தியா சுதந்திரம் அடைவது நிச்சயம். வெகு விரைவில் அடைந்தே தீரும்" என்று உருக்கமாக செய்தி அனுப்பினார்.
ஏப்ரல் 24, 1952
இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக ராஜேந்திரபிரசாத்தும் துணை ஜனாதிபதியாக டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஏப்ரல் 24, 1952
இந்தியாவின் முதல் பொது தேர்தல் இன்று துவங்கியது.

Comments
Post a Comment
Your feedback